இயக்குநர் பாலாஜி மோகன் மற்றும் அவரது மனைவியான தன்யா ஆகியோர் குறித்து அவதூறு பரப்பியதற்காக மன்னிப்பு கேட்கும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


பாலாஜி மோகன் தன்யா ஜோடி


ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடிகை ஷ்ருதிஹாசனுக்கு தோழி கதாபாத்திரத்தில் நடித்தவர் தன்யா பாலகிருஷ்ணா. தொடர்ந்து ராஜா ராணி படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தார். பாலாஜி மோகன் இயக்கிய காதலில் சொதப்புவது எப்படி படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து பாலாஜி மோகன் இயக்கிய் இணையத் தொடரான அஸ் ஐ ஆம் சஃபரிங் ஃப்ரம் காதலில் நடித்தார் தன்யா. தமிழில் தொடர்ச்சியான வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தெலுங்கு மலையாள ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருகிறார் தன்யா. பாலாஜி மோகன் மற்றும் தன்யா ஆகிய இருவரும் ரகசியத் திருமணம் செய்துகொண்டதாக கடந்த ஆண்டு தகவல் வெளியானது.


அவதூறு பரப்பிய கல்பிகா


பாலாஜி மோகன் மற்றும் தன்யா ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் . ஆனால் பாலாஜி மோகன் தன்யாவை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாகவும்  யூ டியூப் சானல் ஒன்றில் கூறினார், தெலுங்கு நடிகை கல்பிகா. அவர் பேசியது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது


அவதூறு பரப்பியதாக வழக்கு


இதற்கு பதிலளித்த பாலாஜி மோகன் தனக்கும் தன்யாவிற்கும் திருமணம் நடந்தது உண்மை என்றும் ஆனால் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கல்பிகா கூறியது மொத்தமும் அவதூறு என்றும் கல்பிகா மீது வழக்குப் பதிவு செய்தார் பாலாஜி மோகன்.


மன்னிப்பு கேட்ட கல்பிகா


இந்த வழக்கில் கல்பிகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்  பாலாஜி மோகன் மற்றும் தன்யா குறித்து தான் பேசிய வீடியோவை இணையதளத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும், ஆதாரமில்லாமல் தான் பேசியதற்காக மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.






பாலாஜி மோகன்


காதலில் சொதப்புவது எப்படி, மாரி , மாரி 2, ஆகியத் திரைப்படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன்.