Kalki 2898 AD Worldwide Box Office Collection: பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 27ஆம் தேதி கல்கி 2898AD திரைப்படம் வெளியானது. சுமார் 600 கோடிகள் செலவில் உருவான இப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வெளியானது முதலே வசூலில் மாஸ் காண்பித்து வருகிறது.


உலக அளவில் 1000 கோடிகள் வசூல்


குறிப்பாக அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல் ஆகியோரின் நடிப்பு, தொழில்நுட்ப அம்சங்கள், சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் ஆகியவை பாராட்டுகளைப் பெற்ற நிலையில், படத்தின் நீளம், ஹாலிவுட் பாணி காட்சிகள் ஆகியவை விமர்சனங்களைப் பெற்றன. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி இப்படம் தொடர்ந்து கல்லாகட்டி வருகிறது.


அந்த வகையில் தற்போது படம் வெளியாகி 17 நாள்களில் கல்கி 2898 AD திரைப்படம் ரூ.1000 கோடிகள் வசூலைக் கடந்து இமாலய சாதனை படைத்துள்ளது. நடிகர் பிரபாஸின் பாகுபலி பாகம் 2 திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி உலக அளவில் ரூ,1800 கோடிகளைக் கடந்து சாதனை படைத்தது. அந்த வரிசையில் தற்போது பிரபாஸின் இரண்டாவது படமாக கல்கி 1000 கோடிகள் வசூல் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.


 






ரூ.1000 கோடி வசூலைக் கடந்த 7வது படம்


மேலுன், தங்கல், பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர், கேஜி எஃப், பதான், ஜவான் ஆகிய படங்கள் 1000 கோடிகள் வசூல் என்ற இலக்கை எட்டிய இந்தியப் படங்களாக அசைக்க முடியாத பாக்ஸ் ஆஃபிஸ் சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது இந்த வரிசையில் பிரபாஸின் கல்கி திரைப்படம் 7வது இடம்பெற்றுள்ளது.


கல்கி திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடிகர் கமல்ஹாசன் மிரட்டல் வில்லனாக சில காட்சிகளே தோன்றியிருந்த நிலையில் அவரது கதாபாத்திரம் 2வது பாகத்தில் பெரும் பங்கு வகிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், திஷா பதானி, துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, அனா பென், மிருணாள் தாகூர், பசுபதி, மாளவிகா நாயர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.


மேலும் படிக்க: Indian 2 Review: ரசிகர்களுக்கு விருந்தா? லஞ்சத்தை ஒழிக்க மருந்தா? இந்தியன் 2 முழு திரை விமர்சனம் இதோ


Indian 2 Box Office: உலக அளவில் ரூ.50 கோடி! ஜெட் வேகத்தில் கமல் - ஷங்கர் கூட்டணி: இந்தியன் 2 முதல் நாள் வசூல் நிலவரம்!