ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு பி.எம்.டபிள்யூ சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் உரிமையாளர் கலாநிதி மாறன்.


ஜெயிலர் வசூல் சாதனை


இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் உருவான ஜெயிலர்,  கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான நிலையில், ரூ.600 கோடி வசூலைக் கடந்தாக கூறப்படும் நிலையில் இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.


கோலிவுட்டின் மாபெரும் வெற்றிப்படமாக ஜெயிலர் உருவெடுத்துள்ள நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்த வெற்றியைக் மகிழ்ச்சியாக கொண்டாடி  வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸின் நிறுவனர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.


ரூபாய் ஒன்றரை கோடி மதிப்புள்ள கார் பரிசு






ஜெயிலர் படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை முன்னிட்டு ரஜினிகாந்துக்கு ரூ.1.24 கோடி மதிப்புள்ள BMW x7 ரக சொகுசு காரை அவருக்கு பரிசாக வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். ரஜினியிடம் 1.24 கோடி மதிப்புள்ள BMW x7 மற்றும்  BMW i7 ஆகிய இரண்டு ரக சொகுசு கார்களை காட்டி அதில் ஒன்றை தேர்வு செய்யுமாறு கலாநிதி மாறன் கேட்டுக் கொண்டார். அதில் ரஜினிகாந்த் BMW x7 தேர்வு செய்தார்.


ரூ.600 கோடிகளை நெருங்கும் வசூல்.


ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் ரூ.600 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. முன்னதாக ஜெயிலர் 525 கோடிகளை வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக சன் பிச்சர்ஸ் அறிவித்தது. தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ. 328 கோடிகள் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் sacnilk தளம் வெளியிட்டுள்ளது.


இந்நிலையில் இப்படம் ரூ.600 கோடிகள் வசூலைக் குவிக்குமா? என எதிர்பார்த்து கோலிவுட் ரசிகர்கள் காத்துள்ளனர். மேலும் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் ரூ.615 கோடிகளுக்கு மேல் வசூலித்து அதிகம் வசூலித்த தமிழ் படமாக இதுவரை சாதனையைத் தக்க வைத்துள்ள நிலையில், இதனை ஜெயிலர் திரைப்படம் கடக்குமா? என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


செக் கொடுத்த கலாநிதி மாறன்


மேலும் ஜெயிலர் படத்தின் சம்பளத் தொகையையும் செக்காக கலாநிதி மாறன் நேற்று ரஜினிகாந்திடம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.