வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை வைத்து தனிப்படம் ஒன்றை எடுக்க இருப்பதாக பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்து இருக்கிறார். 


இது குறித்து கலைப்புலி தாணு பேசும் போது, “ வந்தியத்தேவன் என்ற பெயரிலேயே தினத்தந்தி சண்முக நாதன் எனக்கு கதை ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்தக்கதையை படமாக எடுப்பதற்கு சில முயற்சிகளை கூட நான் எடுத்தேன். வந்தியத்தேவனை நான் மனதில் வரிந்து கொண்டு இருக்கிறேன். இப்படி இருக்கும் போது நான் பொன்னியின் செல்வனை போட்டி என்று சொல்லலாமா.. அவர்களுக்கு ஒரு விடை இந்த வந்தியத்தேவன். அந்தக்கதையை நான் நிச்சயமாக எடுப்பேன். அந்தப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தியை நடிக்க வைக்க இருக்கிறேன்.” என்று பேசியிருக்கிறார்.




கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.


செப்டம்பர் 30 ஆம் தேதி ( இன்று) வெளியான இந்தப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், பெரும்பான்மையான ரசிகர்களுக்கு படம் பிடிக்கவே செய்திருக்கிறது. படத்தின் கதையே ‘வந்தியத்தேவன்’ கதாபாத்திரம் வழியாக சொல்லப்படுவதால், வந்தியத்தேவனாக வரும் கார்த்திக்கு நல்ல படத்தில் நல்ல ஸ்கோப் இருந்தது. அதை கார்த்தி சரியாகவே பயன்படுத்திருக்கிறார்.  


 






முதலில் செப்டம்பர் இறுதியில் பொன்னியின் செல்வன் படம் மட்டுமே ரிலீஸ் ஆவதாக இருந்தது. இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய நானே வருவேன் படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக அந்தப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்தார். அதன்படி பொன்னியின் செல்வன் படம் வெளியான செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு முந்தைய தினமான நேற்று (செப் 29) வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.  படத்தை பார்த்த பெரும்பான்மையான ரசிகர்கள் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், இராண்டாம் பாதி சுமாராக இருப்பதாகவும் கூறினர்.


மேலும் தனுஷின் நடிப்பு மற்றும் யுவன்ஷங்கர்ராஜாவின் இசை சிறப்பாக இருப்பதாக கூறினர். இந்த நிலையில் இந்தப்படத்தின் முதல்நாள் வசூல் தொடர்பான அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியாகியுள்ளன. அந்தத்தகவல்களின் படி வெளியான முதல் நாளன்று   ‘நானே வருவேன்’ திரைப்படம்  10 கோடி 12 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக்கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு படத்தின் இயக்குநர் செல்வராகவனுக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். 




முன்னதாக,  முன்னதாக பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக நானே வருவேன் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியான நிலையில், இது குறித்து பேசியிருக்கும் அவர், “பொன்னியின் செல்வன் படத்திற்கு எதிராக ‘நானே வருவேன்’ படம் வெளியிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதில் அவர்களுக்கும் சரி, எங்களுக்கும் சரி எந்த வித கருத்துவேறுபாடு இல்லை.


உதாரணத்துக்கு ஜூன் மாதம் 25 ஆம் தேதி நானும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் சிஇஓ தமிழ்குமரனும் பேசும் போது, இரண்டு பேரும் ஒரே மாதத்தில்தான் வருகிறோம் என்றேன். உடனே அவர் ஏன் என்று கேட்டார்? .. அதற்கு  பதிலளித்த நான்  ‘அசுரன்’ படத்தை பண்டிகையின் போதுதான் வெளியிட்டேன். அதே போல இதிலும் அந்த 9 நாட்களை நான் விடமாட்டேன் என்று சொன்னேன்." என்று பேசினார். 


நன்றி: Behindwoods