தமிழ் சினிமா ரசிகர்களின் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் இன்று வெளியாகியுள்ளது.


படம் குறித்து ரிவ்யூக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து குவிந்தபடி உள்ள நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் ஏற்று நடித்துள்ள நந்தினி கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளைக் குவித்து வருகிறது.


கோலிவுட் ரீ- என்ட்ரீ


பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்தப் படத்தின் மூலமாக ஐஸ்வர்யா ராய் கோலிவுட்டில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ - எண்ட்ரி கொடுத்துள்ளார்.


இக்கதையின் முக்கியமான க்ரே கதாபாத்திரங்களான நந்தினி, மந்தாகினி என இரட்டைக் கதாபாத்திரங்களை ஐஸ்வர்யா ராய் இப்படத்தில் ஏற்று நடித்துள்ளார்.


க்ரே கதாபாத்திரம்


இதில் குறிப்பாக பெரிய பழுவேட்டரையரின் மனைவி, ஆழ்வார்க்கடியானின் வளர்ப்புத் தங்கை, ஆதித்த கரிகாலனின் முன்னாள் காதலி, வீரபாண்டியனின் காதலி என பல மர்மங்கள் நிறைந்த கதாபாத்திரமாக விளங்கும் நந்தினியின் கதாபாத்திரம் சோழர்களிடமிருந்து அரியணையைப் பறித்து பழிவாங்கத் துடிக்கும் பெண்ணாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.


பேரழகு, வன்மம், பழி வாங்கும் எண்ணம், புத்திக்கூர்மை, மர்மம் என கவனம் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கல்கியின் இந்த கற்பனைக் கதாபாத்திரம் பலருக்கும் இன்று வரை விருப்ப கதாபாத்திரமாக விளங்கி வருகிறது.


நந்தினியா நடிக்க பிறந்தவர்


இந்நிலையில் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள ஐஸ்வர்யா  ராய் அற்புதமாக பொருந்தி நடித்திருப்பதாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாக நடிப்பதற்கென்றே பிறந்தவர் எனப் பலரும் இணையத்தில் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.


 










 


கோலிவுட் பிரபலங்கள் தொடங்கி பான் இந்தியா ரசிகர்கள் வரை ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தை சமூக வலைதளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.


 










பிரேக் தந்த இந்தி நந்தினி!


ஏற்கெனவே 1999ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் ’ஹம் தில் தே சுக்கே சனம்’ படத்தில் ஐஸ்வர்யா ராய் ஏற்று நடித்த நந்தினி என்னும் கதாபாத்திரமே அவரது திரை வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.


 






இறுதியாக இந்தியில் 2018ஆம் ஆண்டு ஃபேனி கான் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். தற்போது சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பொன்னியின் செல்வன் மூலம் கம்பேக் கொடுத்துள்ளது அவரது பான் இந்தியா ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.