உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான “கலகத் தலைவன்” படம் பார்த்து வாழ்த்திய தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின். 


ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”. இப்படம் உலகமெங்கும் நாளை நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது. 


இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  “கலகத் தலைவன்” திரைப்படத்தை படக் குழுவினருடன் இணைந்து,  தனியார் திரையரங்கில் நேற்று பார்த்தார். படத்தை பார்த்த பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக  “கலகத் தலைவன்” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு  தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். 


நாளை நவம்பர் 18 ஆம் முதல் உலகமெங்கும் வெளியாகிறது ‘கலகத் தலைவன்’.


இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இவர், தடம், மீகாமன், தடையறத் தாக்க ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவரது தடம் படம் அருண் விஜய் நடிப்பில் வெளியாகி மாறுபட்ட கதைக் களத்திற்காக வெகு விமரிசையாக பாராட்டைப் பெற்றது. தடையறத் தாக்க படத்திலும் அருண் விஜய் நடித்திருந்தார். அந்தப் படமும் பரவலான வரவேற்பைப் பெற்றது.


இயக்குநர் மகிழ் திருமேனியின் படங்கள் பெரும்பாலும் ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமாகவே இருக்கும். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கலகத் தலைவனும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து வெளியான ஈஸ்வரன் படத்தில் அறிமுகமான நிதி அகர்வால், கலகத் தலைவன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.






உதயநிதி ஸ்டாலினே தயாரித்து வெளியிடும் இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் பணிகளுடன் தமிழ் திரைப்படங்களை தயாரிப்பது, ரிலீஸ் செய்தல் போன்ற பணிகளையும் உதயநிதி செய்து வருகிறார். இவரது நடிப்பில் நெஞ்சுக்கு நீதி படம் இந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியில் பாராட்டுகளை பெற்றது.


Vaathi Release Date: இது மாஸ்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. தனுஷின் ‘வாத்தி’ படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்..


முன்னதாக, "பரியேறும் பெருமாள்" மற்றும் "கர்ணன்" போன்ற ஹிட் திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "மாமன்னன்". உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாஃசில், வடிவேலு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் ஒளிப்பதிவு பணிகளை தேனி ஈஸ்வர் மேற்கொள்ள படத்தொகுப்பை செல்வா செய்ய எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார் ஆர்.கே.


Jailer Update: செம்ம மாஸ்.. வெளியானது ஜெயிலர் படத்தின் எக்ஸ்க்லூசிவ் ஸ்டில்..


அரசியல் சார்ந்த இப்படத்தில் நடிகர் வடிவேலு எம்.எல்.ஏ வாகவும், உதயநிதி ஸ்டாலின் அவரின் மகனாகவும் நடித்துள்ளனர். பஹத் பாஃசில் வில்லனாக நடித்துள்ள இப்படம், அரசியல்வாதிகளின் வாழ்க்கையை சுற்றி நகர்வதாக கூறப்படுகிறது. மாமன்னன் படப்பிடிப்பு செப்டம்பர் 18ம் தேதி முடிவடைந்தது. படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மிஷ்கின் காணப்பட்டதால், அவர் கேமியோ ரோலில் நடித்திருக்கலாம் என யூகிக்கின்றன சினிமா வட்டாரங்கள். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் 'மாமன்னன்' திரைப்படத்தை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர் என கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும்.