தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர் காஜல் அகர்வால். திரைப்படங்களில் பிஸியாக இருந்தபோதே அவர் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2020 அக்டோபரில் திருமணம் செய்து கொண்டார். 2021 மார்ச்சிலிருந்தே இந்தியாவில் கொரோனா ஆட்டிப்படைத்ததால் படப்பிடிப்புகள் எல்லாம் சுணக்கம் கண்டன. அந்த வேளையில் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பம் தரித்தார். கணவர் கவுதம் கிச்சுலு இதனை உறுதி செய்தார். கடந்த ஏப்ரலில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நீல் கிச்சுலு என்று பெயர் சூட்டினர்.






அன்னையர் தினத்தில் வெளியான முதல் படம்:


நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அன்னையர் தின வாழ்த்துச் செய்தியில், தனது மகனின் புகைப்படத்தை முதன்முறையாகப் பகிர்ந்தார். அந்தப் புகைப்படத்தில் குழந்தையின் தலை மட்டும் தெரியும். முகம் தெரியாது. அந்த படத்துடன் ஒரு நீண்ட பதிவையும் வெளியிட்டார்.


"அன்பே நீல், நீ எனக்கு எவ்வளவு முக்கியம், நீ என் வாழ்வின் வசந்தம் என்பதை அறிய வேண்டும் என விரும்புகிறேன். என் வாழ்வில் முதன்முதலாக உன்னை என் தோளில் சாய்தபோதும்,உன் சின்னஞ்சிறு கைகளை என் கைகளுக்குள் ஏந்தியபோதும், உன் அழகிய கண்கள், உன் சுவாசக் காற்றை உணர்கையில், நான் எப்போதும் காதலின் கதகதப்பில் இருக்கப்போகிறேன் என்பதை உணர்ந்தேன். நி என் முதல் குழந்தை. என் முதல் மகன். என் எல்லாமும் நீ. உனக்கு சிறந்த முறையில் எல்லாவற்றையும் சொல்லிக்கொடுக்க முயற்சிப்பேன்.ஆனால். உன் வருகையில் மூலம் எனக்கு எல்லையில்லாவற்றை  சொல்லிக்கொடுத்துவிட்டாய் நீ. தாய்மையின் உணர்வை நீதான் எனக்கு உணர்த்தினாய். எதையும் எதிர்பார்க்காத அன்பு என்பதை நீதான் கற்றுத்தந்தாய். என் உடலின் வெளியே என் இதயம் இருக்கும் என்பதையும் நீதான் என உணர்த்தினாய்.


தாய்மை சற்று பயமனா பயணம்தான். ஆனால், அழகானது. நான் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. நீ எப்போதும் மகிழ்ச்சியுடன் வளர வேண்டும். இந்த உலகம் உன்னால் எதுவும் முடியாது என்று சொல்லும் வார்த்தை உன்னை பாதிக்கக்கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன்.நீ ஒன்றை எப்போதும் மறந்துவிடாதே! நீ எனக்கு, ’You are my sun, my moon, and all my stars, little one." என்று கூறியிருந்தார். இந்தப் பதிவு வைரலான நிலையில், நெட்டிசன்கள் சிலர் இது சுட்ட போஸ்ட் என்று கூறி கலாய்த்தனர்.


இந்நிலையில், காஜல் அகர்வால் ட்விட்டரில் தனது குழந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் குழந்தையை காஜல் அகர்வால் தூக்கி வைத்துள்ளார். அதில் காஜலின் முகம் தெரியவில்லை. குழந்தையின் முழு உருவமும் தெரியவில்லை. பிஞ்சுப் பாதங்கள் மட்டுமே தென்படுகின்றன. குழந்தைக்கு ஒற்றைக் காலில் திருஷ்டிக்கான அணிகலன் கட்டியுள்ளனர். அதில் ஒரு கண் வடிவம் இருக்கிறது. குழந்தைக்கும், காஜலுக்கும் நெட்டிசன்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். புகைப்படத்துக்கு ஒரு கேப்ஷனும் கொடுத்துள்ளார் காஜல். அதில், மிகவும் அழகான சிறிய விஷயம்!” என்று பூமி தொடாத பிள்ளையின் பாதத்தை போற்றியுள்ளார்.