நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமடைந்துள்ளார் என்பது அவரது கணவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் மூலம் உறுதியானது. புத்தாண்டு தினமன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜலின் புகைப்படத்தை கெளதம் கிச்சலு பதிவிட்டார். அதில், “2022-ல் உங்களை பார்க்கிறேன்” என்று பதிவிட்டதோடு, அதன் பக்கத்தில் கர்ப்பம் அடைந்த ஒரு பெண்ணின் எமோஜியையும் பதிவு செய்திருந்தார்.


இந்நிலையில், ‘பேபி பம்ப்’ தெரியும்படி காஜல் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரிதான் இன்றைய தினத்தின் செலப்ரிட்டி ஹைலைட். தற்போது கோவாவில், கணவருடன் விடுமுறை நாட்களை கொண்டாடி வரும், அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “2022” என பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிகிறது. புகைப்படத்தை பகிர்ந்து வரும் காஜல் ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.






முன்னதாக, தமிழில் பரத் நடிப்பில் இயக்குநர் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி படத்தில் நடிகை காஜல் அகர்வால் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்த அவர் விஜயுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் படங்களிலும், அஜித்துடன் விவேகம் படத்திலும், சூர்யாவுடன் மாற்றான் திரைப்படத்திலும் நடித்தார். இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் நடித்த காஜல் அகர்வால், கடந்த ஆண்டு தொழிலதிபர் கெளதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார்.


அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த  இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார். ஆனால் கிரைன் விழுந்து விபத்து ஏற்பட்ட நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து கொரோனா காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனிடையே காஜல் அகர்வால் கர்ப்பமாகியுள்ளதாகவும், இதனால் அவர் அந்தப் படத்தில் இருந்து விலகியதாகவும் சொல்லப்பட்டது. அண்மையில் துல்கர் சல்மான் உடன்  காஜல் அகர்வால் நடிக்கும் ஹே சினாமிகா  படத்தின் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண