பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. காஜல் அகர்வால் மற்றும் அவரது கணவர் கௌதம் கிட்ச்லு ஆகியோர் தங்களது முதல் குழந்தையை ஒன்றாக வரவேற்றுள்ளனர். காஜல் தனது கர்ப்பத்தை ஜனவரி மாதம் சமூகவலைதளம் மூலம் அறிவித்தார். இப்போது தம்பதியினர் இறுதியாக தங்கள் குழந்தையை வரவேற்றுள்ளனர்.
காஜல் மற்றும் கௌதம் கிட்ச்லு கடந்த 2020 அக்டோபர் 30 அன்று திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி மிகவும் நெருக்கமான திருமண விழாவை நடத்தியது. கர்ப்பம் பற்றிய வதந்திகள் அவர்களின் திருமணத்திற்குப் பிறகு விரைவில் பரவத் தொடங்கின. ஆனால் தம்பதியினர் அதை உறுதிப்படுத்தவில்லை. ஆனால், காஜல் இறுதியாக தனது சமூகவலைதள பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
முன்னதாக, தனது கர்ப்பப் பயணம் பற்றிப் பேசிய காஜல், முன்பு ஒரு பதிவில், “என் வாழ்க்கை, என் உடல், என் வீடு மற்றும் மிக முக்கியமாக எனது பணியிடத்தில் மிகவும் அற்புதமான புதிய முன்னேற்றங்களை நான் கையாண்டு வருகிறேன். ஒரு சிறிய குழந்தையைப் பெற்றெடுக்கும் முழு செயல்முறையும், நாம் அனுபவிக்கும் பாக்கியம் கொண்ட ஒரு கொண்டாட்டம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனது உணர்வுகளைச் சமாளிக்க உதவும் சில குறிப்புகள் கீழே உள்ளன. என்னுடன் சேர்ந்து இந்த அற்புதமான கட்டத்தில் இருப்பவர்களுக்கு இந்தப் பதிவு உதவும் என்று நம்புகிறேன். என் அன்பை உங்களுக்கு அனுப்புகிறேன்” என்றார்.
நடிகை தனது குழந்தை பிறந்ததை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனாலும், காஜல் மற்றும் கௌதம் ஆகியோருக்கு ரசிகர்கள் சமூகவலைதளத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்