கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் “கைதி”. இந்த படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதி அதனை இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். படத்தை தயாரித்திருந்தார் எஸ்.ஆர்.பிரபு. சிறையிலிருந்து வெளியில் வரும் கதாநாயகன் , வழியில் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என ஒரு இரவில் நடக்கு பிரச்சனைகளை விறு விறுப்பான கதைக்களத்துடன் உருவாகியிந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். கதாநயகி இல்லாத திரைப்படத்தில் கார்த்தியுடன் நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன், பெஞ்சமின் உள்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தின் சண்டைக்காட்சிகள் பெருமளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக சமீப காலமாக பேச்சுக்கள் அடிப்பட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் படத்தின் அடுத்த பாகம் விரைவில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. எதிர்பார்பை ஏற்படுத்தும் விதமாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவும் விரைவில் கைதி 2 ஆம் பாகத்தை எதிர்பார்த்து காத்திருப்பது போன்று ரீ-ட்வீட் செய்திருந்தார்.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் , கமல்ஹாசன் , விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்டவர்களை வைத்து தற்போது இயக்கி வரும் விக்ரம் திரைப்படத்தை முடித்த கையோடு , கைதி 2 ஆம் பாகத்தை இயக்குவார் என கோலிவுட்டில் கிசு கிசுக்கப்படுகிறது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து படம் இயக்க போவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த படத்தை சில காரணங்களால் தாமதமாக தொடங்கவுள்ளதாகவும் , அதற்கு முன்னதாக கைதி 2 ஆம் பாகத்தை தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கைதி இரண்டாம் பாகத்தின் கதையை பொருத்தவரையில் கார்த்தி சிறையில் ஏன் அடைக்கப்பட்டார், அவருக்கும் நஹரிஷ் உத்தமனுக்கும் உள்ள பகை என்ன , மகள் ஏன் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்கிறாள், மனைவி யார் ? என பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமையும் என தெரிகிறது. முதல் பாகத்தை பொருத்தவரையில் காதல் காட்சிகள் , காமெடி காட்சிகள் இடம்பெறவில்லை. செண்டிமெண்டும் அவ்வபோது சாரலாய் வந்து போனது. ஆனால் கைதி 2 பாகத்தில் அவற்றிற்கெல்லாம் பஞ்சமிருக்காது என தெரிகிறது. விரையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது.