விஜய் சேதுபதி நடிப்பில் எம். மணிகண்டன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் கடைசி விவசாயி. முன்னதாக மணிகண்டன் இயக்கத்தில் வெளியான காக்கா முட்டை திரைப்படம் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கிருமி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தார் ஆனால் அவை காக்கா முட்டை படத்தின் வெற்றியை ஈட்டவில்லை.  ஆண்டவன் கட்டளை படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்துள்ளார் மணிகண்டன் .கடைசி விவசாயி படத்தில் , விஜய்  சேதுபதியின் ஃபர்ஸ்லுக் போஸ்டர் வெளியானது முதலே படத்திற்கான ஹைப்பும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. தற்போது படத்தின் டிரைலரும் வெளியாகி கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.







விவசாயம் குறித்த வழக்கமான கதையை மணிகண்டன் கையில் எடுத்திருந்தாலும், அவர் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் படத்தை எடுத்திருப்பார் என்ற நம்பிக்கை ஏற்படுத்துவதாக இருக்கிறது டிரைலர்.  கைகளில் பல கடிகாரங்களை அணிந்துக்கொண்டு முருக பக்தராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. அவரது கதாபாத்திரம் டிரைலரில் பார்ப்பதற்கு சற்று புதிரானதாக உள்ளது. ஆனாலும் அவர் பேசும் வசனங்கள் ஆழமானதாக இருக்கிறது. ஒற்றை விவசாயி தனது விவசாயம் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் , ஆர்வமும்தான் கதைக்களமாக இருந்தாலும் , டிரைலரின் இடையில் அவர் சிறைக்கு செல்வதாக காட்சிகள் அமைகிறது. அதன் பிறகு விஜய் சேதுபதி தொடர்ந்து விவசாயி விட்டுச்சென்ற இடத்திலிருந்து விவசயாத்தை தொடங்குவாரோ என்ற எதிர்பார்ப்புகள் நிலவுகிறது..இதில் சஸ்பென்ஸ் மற்றும் சுவாரஸ்யங்களை புகுத்தி இயக்குநர் படமாக்கியிருப்பார்என டிரைலரின் காட்சிகள் நமக்கு விளக்குகின்றன.






கடைசி விவசாய படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், முன்னதாக இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில். அதன் பிறகு சந்தோஷ் நாராயணன் மாற்றப்பட்டார்.தோட்ட தரணி கலை இயக்குனராகவும், அஜித் குமார் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார். படத்தில் விஜய் சேதுபதியுடன்  நல்லாண்டி என்ற முதியவர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.காமெடியனாக யோகி பாபு நடித்துள்ளார்.இவர்களுடன் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். கடைசி விவசாயி படம் குறித்த அறிவிப்பு கடந்த 2016 ஆம் ஆண்டே வெளியான நிலையில் சில காரணங்களால் படப்பிடிப்புகள் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது. பின்னர் சோனி லிவ் நிறுவனம் இப்படத்தின் உரிமையை வாங்கியுள்ளதாகவும்  தகவல் பரவியது. இந்நிலையில் 'கடைசி விவசாயி' படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.படத்தை விஜய் சேதுபதியுடன் இணைந்து டிரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.