நானும் ரவுடி தான் திரைப்படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. காதல், காமெடி ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில், ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ படத்தின் ட்ரெய்லர் கடந்த 22-ம் தேதி வெளியானது.


இந்நிலையில், படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் அதிகம் கவனம் செலுத்தி வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனியார் பத்திரிக்கைக்கு நேர்காணல் அளித்திருக்கிறார். அதில் இப்படத்தின் சிறப்பு என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் அவர், “நானும் ரவுடிதான் படத்திற்கு முன்னதாக எழுதப்பட்ட கதை இது. எனக்கு மிகவும் பிடித்த கதை இது. இத்திரைக்கதையை எழுத மூன்றாண்டுகள் எடுத்து கொண்டேன். படத்தை இயக்க நான்கு ஆண்டுகளானது. இந்தப்படம் எனக்கு தனிப்பட்ட முறையிலும் சரி, பணி நிமித்தமாகவும் சரி மிகவும் ஸ்பெஷலான ஒரு படம்” என தெரிவித்திருக்கிறார்.


தொடர்ந்து நயன்தாராவுடன் எப்போது திருமணம் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “எங்களது திருமணம் குறித்து எப்போதும் வதந்திகள் பரவி கொண்டுதான் இருக்கிறது. கிட்டத்தட்ட 27 முறை எனக்கு சமூக வலைதளங்களில் திருமணம் செய்து வைத்துவிட்டனர். இக்கதைகளை பார்த்து சிரித்து கொள்வேன். எங்களுக்கு திருமணம் நடைபெறும்போது கண்டிப்பாக அனைவருக்கும் அறிவிப்போம். அது பொய் செய்தியாக இருக்காது. அனைவரின் ஆசீர்வாதத்துடன் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்” என தெரிவித்திருக்கிறார்.









காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்தத்திரைப்படத்தில் கண்மணியாக நயன்தாராவும், கதிஜாவாக சமந்தாவும் நடித்துள்ளனர். இவர்கள் இரண்டு பேரை காதலிப்பவராக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.





முன்னதாக படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் நாளை திரையரங்குகளில் நாளை வெளியாக உள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண