இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா சமந்தா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கிடையே படத்தின் ஷூட்டிங் இன்று முடிவடைந்ததை அடுத்து ஸ்பாட்டில் அதனை கேக் வெட்டிக் கொண்டாடி உள்ளனர்.






இதற்கிடையே படம் முடிவடைந்ததை அடுத்து அதனை அறிவிக்கும் விதமாக நயன்தாராவும் விக்னேஷ் சிவனுடனான புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  கோலிவுட் சூப்பர் ஜோடிகளான நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் அண்மையில் நிச்சயம் செய்துகொண்டனர் எனத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் திருமணம் எப்போது என்கிற செய்தி எதுவும் இதுவரைத் தெரியவரவில்லை. 






காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சமந்தா மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம். படத்தின் ட்ரெய்லர் வெளியானதுமே அது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தன. ஏற்கெனவே நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை ஜோடியாக வைத்து விக்னேஷ் சிவன் நானும் ரௌடிதான் என்கிற திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.  






சமந்தாவின் பிறந்த நாளான ஏப்ரல் 28 அன்று படம் திரைக்கு வர உள்ளது.