மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி - ஜோதிகா இணைந்து நடிக்கும் ‘காதல் தி கோர்’ திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 


கடந்த 2021- ஆம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி ஹிட்டான மலையாள திரைப்படமான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் இயக்குனர் ஜியோ பேபி, ‘காதல் தி கோர்’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.





காதல் தி கோர்:


பிரபல நடிகை ஜோதிகாவும் மம்முட்டியும் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜோதிகாவை ஸ்கிரினில் காணும் ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடிகை ஜோதிகா மீண்டும் மலையாள படம் ஒன்றில் நடிப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மம்முட்டி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் கொச்சி கோலஞ்சேரியில் நடந்தது. முதற்கட்ட படப்பிடிப்பின்போது, ஹூட்டிங் ஸ்பாட்டிற்கு விருந்தினராக சென்ற நடிகர் சூர்யா படக்குழுவினருடன் பிரியாணி சாப்பிட்டது வைரலானது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு நவம்பரில் நிறைவடைந்தது.




என்றென்றும் ஜோ:


திருமணம் முடிந்த பிறகு சில ஆண்டுகள் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை ஜோதிகா, 36 வயதினிலே திரைப்படம் மூலம் மீண்டும் திரையுலகிற்குள் ரீ என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து பல கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களான மகளிர் மட்டும், பொன்மகள் வந்தாள், காற்றின் மொழி, நாச்சியார், உடன் பிறப்பு போன்ற படங்களின் மூலம் மீண்டும் மாஸ் காட்டினார்.


காதலை மையப்படுத்திய படமாக இருக்கும் என்பதை ஏற்கனவே முதல் போஸ்டர் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.




மம்முட்டி மகிழ்ச்சி:


இந்த திரைப்படத்தின் படப்பிடித்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “காதல் தி கோர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. சிறந்த குழுவுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சியளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார். 




மேலும் வாசிக்க..


Arya Daughter: காதர்பாட்சா படத்தில் இவர் தான் ஹேர்ஸ்டைலிஸ்ட்.. மகளுடன் க்யூட் வீடியோ பகிர்ந்த ஆர்யா..!


Pichaikkaran 3: விரைவில் வருகிறது 'பிச்சைக்காரன் 3'.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த விஜய் ஆண்டனி..!