காளிதாஸ் ஜெயராம் சமீபத்தில் வெளியான பாவக்கதைகள் ஆந்தாலஜி மூலமாக என்று தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறியப்படுகிறார். "மீன் குழம்பும் மண் பானையும்" திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார் காளிதாஸ். அதைத்தொடர்ந்து ஓடிடி தளத்தில் "புத்தம் புது காலை " "பாவக்கதைகள் " ஆந்தாலஜி படங்களில் நடித்தார் . இந்தப் படங்களில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. "தங்கம் " கதாபாத்திரத்தில் அனைவர் மனதையும் ஈர்த்தார் காளிதாஸ்.

Happy to unveil the title of my next bilingual film

🔴🔴🔴 RAJNI 🔴🔴🔴

And I am really excited to be a part of this film, shoot is going on.That's it for now ,love you guys as usual ❤️
Ps . STAY TUNED for the TAMIL title of this film 🙏 pic.twitter.com/StskXc6Jmu
— kalidas jayaram (@kalidas700) April 14, 2021

இந்நிலையில் , காளிதாஸின் அடுத்த படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளிவரவுள்ளது . இப்படத்தை வினில் வர்கீஸ் இயக்குகிறார். மலையாளத்தில் இந்த படம் ரஜினி என்ற பெயரில் வெளியாக உள்ளது. தமிழில் இன்னும் இந்த படத்திற்கு பெயர் வைக்கவில்லை. தமிழில் ஏற்கனவே ரஜினி என்னும் படம் வெளியாக உள்ளதால் "ரஜினி ரசிகன்” என்று பெயர் சூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.