தமிழ் சினிமாவின் எக்ஸ்பிரஷன் குயின் என அழைக்கப்படும் நடிகை ஜோதிகா கிட்டத்தட்ட 10 ஆண்டு காலம் தமிழ் சினிமா ரசிகர்களை தனது கைக்குள் அடக்கி வைத்து இருந்தார் என்றே சொல்ல வேண்டும். முன்னணி நடிகையாக சிம்மாசனத்தில் இருந்த நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை   காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்ட ஜோதிகா '36 வயதினிலே' திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்த என்ட்ரியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் சமூக அக்கறை கொண்ட படங்களிலும் நடித்து வந்தார். மேலும் தனது கணவர் சூர்யா உடன் இணைந்து 2டி என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் தென்னிந்திய படங்கள் மற்றும் பாலிவுட் படங்களை தயாரித்து வந்தார்கள். 



44-வது பிறந்தநாள் :


சூர்யா - ஜோதிகா தம்பதியினருக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜோதிகா சமீபத்தில் தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாளுக்கு அவர் வலிமையையும், ஆரோக்கியத்தையும் தனக்கு பரிசளிப்பதாக கூறி வயது என்னை மாற்ற அனுமதிக்காமல் நான் வயதை மாற்றுவேன் என  பதிவிட்டு இருந்தார். 






வாவ் ஜோதிகா :


சமீபகாலமாக கடுமையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஃபிட்னெஸ் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகை ஜோதிகா. அந்த வகையில் தலைகீழாக உடற்பயிற்சிகளை அவர் செய்து வரும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார். கடுமையாக பயிற்சி எடுத்து இப்போது தலைகீழாக ஒற்றை கையால் பேலன்ஸ் செய்வது, தலைகீழாக மாடிப்படியில் இறங்குவது போன்ற அவரின் பயிற்சி வீடியோவைப் பகிர்ந்துள்ளார். தலைகீழாக பார்த்தால் மாம் டர்ன்ஸ் வாவ் என்ற ஒரு கேப்ஷனும் கொடுத்துள்ளார். 


ஜோதிகாவின் இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் உண்மையிலேயே நீக்க வாவ் ஜோ! வேற லெவல் மாம் நீங்க மேடம் என பூரித்துப் போய் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். வயது என்பது வெறும் நம்பர்தான் என்பதை நிரூபித்து விட்டார் நடிகை ஜோதிகா. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பகிரப்பட்டு ஏராளமான லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.