Jyothika | ''15 வருட மகிழ்ச்சி'' - கணவர் சூர்யாவின் அன்பை நெகிழ்ச்சியாய் பதிவு செய்த ஜோதிகா.!

கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி கைகளில் தேசிய கொடி ஏந்தியபடி ,இமயமலையின் அடிவாரங்களில் தன் நண்பர்களுடன் செலவிட்ட அருமையான தருணங்களை பகிர்ந்து , சோஷியல் மீடியா எண்ட்ரி கொடுத்தார் ஜோதிகா.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. கதாநாயகியாக இருந்தால் கச்சிதமான உடல்வாகுடன் ஸ்லிம்மாகத்தான் இருக்க வேண்டும் என்ற நிலையை மாற்றியது ஜோதிகாவின் தமிழ் சினிமா எண்ட்ரி. ஓவர் ஆக்ட் செய்தாலும் ரசிக்கும்படியாக இருக்கும் ஒரே நடிகை ஜோதிகாதான் என ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில்  தலைக்காட்டாமல் இருந்த ஜோதிகா, தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி கைகளில் தேசிய கொடி ஏந்தியபடி ,இமயமலையின் அடிவாரங்களில் தன் நண்பர்களுடன் செலவிட்ட அருமையான தருணங்களை பகிர்ந்து , சோஷியல் மீடியா எண்ட்ரி கொடுத்தார் ஜோதிகா. அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த அவரை சூர்யா அன்புடன் வரவேற்றிருந்தார். தற்போது ஜோதிகாவை 1.6 மில்லியன் பேர் ஃபாலோ செய்கின்றனர்.

Continues below advertisement

 

அதன் பிறகு ஜோதிகா தான் இமயமலை சென்று அங்கு செலவிட்ட நேரங்களை வீடியோவாக எடிட் செய்து, Vlog ஆக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் IGTV  பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதுவும் செம வைரலாக ஷேர் செய்யப்பட்டது. இந்நிலையில் தனது கணவரும் , நடிகருமான சூர்யாவுடன் எடுத்த கியூட்டான செல்ஃபி புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதற்கு கேப்ஷனாகா” 15 வருட மகிழ்சி, எல்லோரின் அன்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளர்.

 

கோலிவுட் வட்டாரத்தில் 15 ஆண்டுகால திருமண பந்தத்திற்கு பிறகும் ஒரு காதல் ஜோடி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது என்றால் அது சூர்யா- ஜோதிகா இணையர்தான். ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் காதல், மரியாதை, நட்புணர்வு, புரிதல் இவைகளாலேயே இவர்கள் அதிக கவனம் பெருகின்றனர். சூர்யா- ஜோதிகா இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கும் விதம், நட்பு, மற்றவர்களுக்கு மிகச்சிறந்த முன் உதாரணம் எனவும் ரசிகர்கள் இந்த கோலிவுட் ஜோடியை கொண்டாடி வருகின்றனr. ஜோதிகா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் உடன்பிறப்பே.   இப்படம் வரும் அக்டோபர் மாதம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola