நடிகரும், சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவி இருக்கும் போதே கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதுதொடர்பான புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், என்னை திருமணம் செய்து கொண்டு, இரண்டு ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு, நான் கர்ப்பமாக இருக்கும்  நேரத்தில், மாதம்பட்டி ரங்கராஜ் என்னை விட்டு விலகி இருக்கிறார். என் குழந்தைக்கு அவர் தான் அப்பா என ஜாய் கிரிஸில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

Continues below advertisement

புகாரளித்து 10 நாட்களை கடந்தும் நடவடிக்கை எடுக்காததால், முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இதுதொடர்பான செய்திகளும் சமீபத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து ஜாய் கிரிஸில்டா சமீபத்தில் அளித்த பேட்டியில் எனக்கு தாலி கட்டியது பொய்யா, நான் யார் வாழ்க்கையையும் கெடுக்கவில்லை. மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவிக்கு தெரியாமல் எப்படி என்னுடன் வாழ முடியும் என பல கேள்விகளை கேட்டிருந்தார். இந்நிலையில், ஜாய் கிரிஸில்டாவின் அம்மா தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், என் மகள் கடுமையான உழைப்பாளி, இரவு பகல் பாராமல் வேலை பார்ப்பால் அப்படிப்பட்டவளை மாதம்பட்டி ரங்கராஜ்  அழவைத்துவிட்டான். 

என் மகளை பற்றி பலரும் மிக மோசமான வார்த்தைகளால், இயக்குநருடன் போனாள், அங்கு சென்றாள் என்று சொல்கிறார்கள். அப்படி சென்றிருந்தால் என் மகள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்திருப்பாள். பணம், வீடு, சொகுசு கார் என இருந்திருப்பாள். அன்புக்காக ஏங்கிய அவளை இந்த உலகம் அழவைத்து வேடிக்கை பார்க்கிறது. நான் தான் புகார் கொடுக்க சொன்னேன். உன் பின்னால் நான் உறுதியாக இருக்கிறேன் என்று சொன்னேன் என ஜாய் கிரிஸில்டாவின் தாயார் கண்ணீருடன் பேசினார்.

Continues below advertisement

பின்னர் பேசிய அவர்,மாதம்பட்டி ரங்கராஜ் நன்றாக பார்த்துக்கொள்வார் என்று நினைத்தேன். ஆனால், அவர் என் மகளை கருவை கலைக்க சொல்லி அடித்து துன்புறுத்தியது மன வேதனையை தருகிறது.  கஷ்டப்பட்டு என் மகளை வளர்ந்தேன். இதுவரை அவளை நான் அடித்ததே இல்லை. ஆனால், ரங்கராஜ் அவளை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.  இந்த விஷயத்தை ஜாய் கிரிஸில்டா என்னிடம் சொல்லவில்லை, என் பேரன், அவனுக்கு 5 வயசு தான் ஆகுது. அவன், அம்மாவை கட்டில் வைத்து அடித்தார் என்று சொன்னான். இதை கேட்டு நான் உடைந்து போனேன். ஒரு தாயாக அவளுக்கு சரியான வாழ்க்கையை அமைத்து கொடுக்க முடியவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது என தெரிவித்தார்.