2022இல் அதிகம் பார்க்கப்பட்ட விக்கிப்பீடியா பக்கங்களின் பட்டியலில் ஜானி டெப், ஆம்பர் ஹெர்ட் ஆகிய பிரபங்கலங்களின் பக்கங்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.
தங்கள் குடும்ப சச்சரவு, விவாகரத்து காரணமாக உலகம் முழுவதும் டாக் ஆஃப் த டவுனாக மாறிய ஜானி டெப் - ஆம்பர் ஹியர்ட் இருவரும் விக்கிபீடியாவில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்டுள்ளனர்.
ஜானி டெப்பின் விக்கிபீடியா பக்கம் ஒரு கோடியே 95 லட்சத்து 44 ஆயிரத்து 593 பார்வைகளையும், ஆம்பர் ஹெர்டின் பக்கம் ஒரு கோடியே 90 லட்சத்து 67 ஆயிரட்த்து 943 பார்வைகளையும் பெற்றுள்ளன.
இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலிலும் ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட் இருவரும் முன்னதாக முதலிடம் பிடித்தனர்.
அமெரிக்காவில் மாதத்துக்கு 5.6 மில்லியன் தேடல்களுடன் 2022ஆம் ஆண்டில் அடிக்கடி தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் ஆம்பர் ஹெர்ட் முதலிடம் பிடித்தார். 5.5 மில்லியன் மாதாந்திர தேடல்களுடன் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார் ஜானி டெப்.
இந்தப் பட்டியலில் அடுத்ததாக பிரபல 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீரிஸின் முந்தைய கதையான 'ஹவுஸ் ஆஃப் தி டிராகன்' நிகழ்ச்சிக்கான விக்கிபீடியா பக்கம் ஒரு கோடியே 64 லட்சத்து 21 ஆயிரத்து 891 பார்வையாளர்களுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
2011ஆம் ஆண்டு தொடங்கி 2019ஆம் ஆண்டு வரை 8 சீசன்கள் வெளியாகி உலகம் சக்கை போடுபோட்ட HBO தொலைக்காட்சித் தொடர் ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. இதன் 9 அரச குடும்பங்களில் ஒன்றான 'டார்கேரியன்' இனத்தவரைப் பற்றிய ப்ரீக்வலாக ஹவுஸ் ஆஃப் த ட்ராகன் உருவாகியிருந்தது.
இதன் முதல் சீசன் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் திரையிடப்பட்ட நிலையில், உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், அடுத்தடுத்த இடங்களில் 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்' (1,59,82,987 பக்கப் பார்வைகள்), 'கேஜிஎஃப்: அத்தியாயம் 2' (1,59,54,912), 'டாப் கன் மேவரிக்' (1,58,58,877), 'ஆர்ஆர்ஆர்' (1,55,94,732), மற்றும் 'தி பேட்மேன்' (1,48,35,022) ஆகிய திரைப்படங்களின் பக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
நடிகரும் பாடகருமான எல்விஸ் ஆரோன் பிரெஸ்லியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இயக்குநர் பஸ் லஹர்மேனின் வாழ்க்கைவரலாற்றுப் படம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், எல்விஸ் ஆரோன் பிரெஸ்லியின் விக்கிபீடியா பக்கத்தை 15,391,295 பேர் வரை பார்த்துள்ளனர்.