ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட் வழக்கு விசாரணையின்போது ஜானி டெப்பின் முன்னாள் காதலி அளித்த சாட்சியம் தொடர்பான ஆவணங்கள் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


அவதூறு வழக்கு






’பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன்’ படத்தின் மூலம் உலகம் முழுவதுமுள்ள சினிமா ரசிகர்களின் விருப்ப நடிகராக மாறிய ஜானி டெப் மீது அவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் முன்னதாக குடும்ப வன்முறை புகாரை எழுப்பினார். இதனையடுத்து ஆம்பர் ஹெர்ட் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தை நாடினார் ஜானி டெப்.


இவ்வழக்கு விசாரணை ஆறு வாரங்கள் நீடித்த நிலையில்,  ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடரப்பட்ட 3 வழக்குகளில் இரண்டு வழக்குகளில் ஜானி டெப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.


முடிவுக்கு வந்த வழக்கு


டெப் வெற்றி பெற்றதாகக் கருதப்பட்டு, அவரது முன்னாள் மனைவி அம்பர் ஹெர்டுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் உலகம் முழுவதுமுள்ள ஜானி டெப்பின் கணக்கற்ற ரசிகர்கள் மகிழ்ச்சியில் குதித்தனர்.


இந்த வழக்கு முன்னதாக ஒரு வழியாக முடிவுக்கு வந்தாலும் அவ்வப்போது லைம்லைட்டுக்கு வந்து சென்ற வண்ணமே உள்ளது. அந்த வகையில் இவ்வழக்கு விசாரணை தொடர்பாக வெளியான சில ஆவணங்கள் தற்போது கவனம் ஈர்த்துள்ளன.


முன்னாள் காதலியின் சர்ச்சைக் கருத்து


இவ்வழக்கு விசாரணையின்போது சாட்சியம் அளித்த ஜானி டெப்பின் முன்னாள் காதலியில் அமெரிக்க நடிகையுமான எல்லென் பார்க்கின்,  முதன்முதலாக ஜானி டெப்பும் தானும் உடலுறவு கொண்ட போது, டெப் தனக்கு போதை மருந்து கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.




1997ஆம் ஆண்டு ஒரு சில மாதங்கள் மட்டுமே இவர்களது காதல் நீடித்த நிலையில், தான் முதன்முதலாக ஜானி டெப்புடன் உடலுறவு கொள்வதற்கு முன் தனக்கு அவர் க்வாலூட் எனும் மயக்க மருந்தை அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.


ஒய்ன் பாட்டிலை எறிந்தார், போதைக்கு அடிமை


ஆம்பர் ஹெர்டை போலவே எலனும் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ள நிலையில், “ஜானி டெப்பை வன்முறை உலகம் சூழ்ந்துள்ளது” என்றும், “ஃபியர் அண்ட் லோத்திங் இன் லாஸ் வேகாஸ் எனும் படத்தின் படப்பிடிப்பின்போது அவர் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ஒய்ன் பாட்டிலை அறைக் கதவின்மீது விட்டெறிந்ததார்” என்றும்,  “பொதுவாக மோசமான வார்த்தைகளால் திட்டக்கூடியவர் ஜானி டெப்” என்றும், எந்நேரமும் குடித்தபடியே டெப் இருந்ததாகவும், கஞ்சா மற்றும் போதைப் பொருள்களுக்கு டெப் அடிமையாகி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும் ஜானி டெப் முழுக்க முழுக்க மோசமானவர் இல்லை என்றும் தன் இரண்டு குழந்தைகளிடம் அவர் மிக மிகப் பணிவுடன் நடந்து கொண்டார் எனவும், தனக்கு கீழானவர்கள் என அவர் கருதும் நபர்களிடம் ஜானி டெப் கொடூரமாக நடந்து கொண்டார் என்றும் எலென் இவ்வழக்கில் சாட்சியம் தெரிவித்துள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண