பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து வருகிறது. அந்தவகையில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. மனநலம் குன்றிய குழந்தை ஒன்றை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் வதோதரா பகுதியிலுள்ள வச்சில்பிட் கிராமத்தில் பாபுபாய் ராத்வா வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக இவர் மீது அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் ராத்வா மனநலம் குன்றிய சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ராத்வா தனக்கு ஒரு வேலை இருப்பதாக கூறி அந்தச் சிறுமியின் வீட்டிற்கே அருகே வந்துள்ளதாக தெரிகிறது. அப்போது அந்த மனநலம் குன்றிய சிறுமியை அவர்களுடைய பெற்றோர் தனியாக விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் ராத்வா அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் அச்சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு வந்துவுடன் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் புகார் அளித்துள்ளனர்.
அவர்களின் புகாரைத் தொடர்ந்து அச்சிறுமியின் பெற்றோர்கள் ஆசிரியர் பாபுபாய் ராத்வாவை தேடி வந்துள்ளனர். இந்தச் சூழலில் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதில் ஒரு நபர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது தற்கொலை செய்து கொண்ட நபர் பாபுபாய் ராத்வா என்பது கண்டறியப்பட்டது.
அவருடைய உடலை கைப்பற்றி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவருடைய தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் கொலையா? தற்கொலையா? விசாரணை நடத்தி வருகின்றனர். மனநலம் பாதித்த சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்