திரையரங்குகளில் வெளியாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிய சார்பட்டா பரம்பரை திரைப்படம், ஓடிடியில் அமேசான் ப்ரைம் வீடியோவில் இன்று வெளியானது. இப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதலே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில், நேற்று படம் வெளியான சில மணி நேரங்களிலேயே #SarpattaParambarai ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டானது.
மெட்ராஸ் பாக்ஸிங் பரம்பரைகளில் சார்பட்டா- இடியப்ப பரம்பரைகளில் நடக்கும் ஒரு முக்கியமான போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பதுதான் சார்பட்டா பரம்பரை திரைப்படம்.
படத்தின் டைட்டிலே சொல்லிவிடுவதால், இதில் சார்பட்டா பரம்பரையைச் சேர்ந்தவர்தான் கபிலன் (ஆர்யா), அவரது பயிற்சியாளர் ரங்கன் வாத்தியார் (பசுபதி). ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக பாக்ஸிங் செய்ய களமிறங்குகிறார் ஆர்யா. இடியப்ப பரம்பரையைச் சேந்த வேம்புலியை (ஜான் கொக்கேன்) வென்றாக வேண்டும். இதுதான் படம்.
வேம்புலி கதாப்பாத்திரத்தில் வரும் ஜான் கொக்கன், ரியல் லைஃபில் பிரபல வி.ஜே பூஜாவை திருமணம் செய்து கொண்டவர். சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த வீரம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஜான், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் வேம்புலி கதாப்பாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. இந்நிலையில், நடிகர் அஜித் அவரது இன்ஸ்பிரேஷன் எனவும், இந்த கதாப்பாத்திரத்தை அஜித்திற்கு டெடிகேட் செய்வதாகவும் ஜான் கொக்கன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ”நன்றி அஜித் சார். எனக்கு எப்போதும் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிப்பது தல அஜித்தான். வீரம் படப்பிடிப்பின்போது உங்களுடன் பகிர்ந்து கொண்ட நேரம் எனக்கு வாழ்க்கை பாடமாகியது. கடினமாக உழைக்கவும், நல்ல மனிதாக உருவாகவும் எனக்கு எப்போது ஓர் இன்ஸ்பிரேஷனாக இருக்கின்றீர்கள் நீங்கள். இந்த வேம்புலி கதாப்பாத்திரத்தை உங்களுக்காக டெடிகேட் செய்கின்றேன் சார். ஐ லவ் யூ அஜித் சார்” என மிக உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட் இப்போது வைரலாகி வருகின்றது.
சார்பட்டா படத்தை பொருத்தவரை மிகப்பெரிய ப்ளஸ், படத்தின் கேஸ்டிங். படத்தில், கபிலன், வேம்புலி கேரக்டர்களை தவிர்த்து குறிப்பிடுவதற்கு இன்னும் நிறைய கேரக்டர்கள் இருக்கின்றன. முக்கியமான கதாப்பாத்திரமாக பாக்ஸிங் மாஸ்டராக பசுபதி, படம் என்னவோ இவரைச் சுற்றிதான் நகரும். கபிலனின் மனைவி மாரியம்மாளாக துஷாரா விஜயன், யதார்த்தமாக நடித்துள்ளார். டாடி கதாப்பாத்திரத்தில் இங்கிலிஷ் பேசிக்கொண்டே மாஸ் காட்டும் ஜான் விஜய், டேன்சிங் ரோசாக ஷபீர். கைதிக்கு பிறகு அர்ஜூன் தாஸ் எப்படி கொண்டாடப்பட்டாரோ அப்படி டேன்சிங் ரோஸிற்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. அவர் பாக்ஸிங் ரிங்கில் வந்துபோகும் காட்சிகள் மட்டுமின்றி, தனித்துமான உடல் மொழியால் கூட்டத்தின் நடுவிலும் கவனத்தை ஈர்க்கிறார். இன்னும் பல முக்கிய கதாப்பாத்திரங்களில் பலர் நடித்துள்ளனர். அனைவரது நடிப்பும், மெனக்கெடலும் படத்தில் தெரிகிறது, அந்தந்த கதாப்பாத்திரங்களாகவே வந்து போகின்றனர்.