நடிகர் ஜான் கொக்கன் தன் குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக இணையத்தில் பகிர்ந்துள்ளார்.


பிரபல கோலிவுட் வில்லன் நடிகர் ஜான் கொக்கன் தனது குழந்தையின் புகைப்படத்தை முதன்முறையாக இணையத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளத்தின் பிரபல க்யூட் கப்பிளாக வலம் வரும் நடிகர் ஜான் கொக்கன் - பூஜா ராமச்சந்திரன் தம்பதிக்கு கடந்த ஏப்.29ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.


பாகுபலி திரைப்படம் தொடங்கி, சார்பட்டா பரம்பரை, துணிவு என தமிழில் தொடர்ந்து வில்லன் நடிகராக கவனமீர்த்தவர் பிரபல மலையாள நடிகர் ஜான் கொக்கன்.


முன்னதாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் மாஸ் ஹிட் அடித்த ‘சார்பட்டா பரம்பரை’ திரைபடத்தில் வேம்புலி எனும் கதாபாத்திரத்தில் நடித்த  ஜான் கொக்கன், கோலிவுட்டில் பல ரசிகர்களை தமிழ் சினிமாவில் சம்பாதித்தார். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக ரிலீசான துணிவு படத்தில் கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித்துக்கு வில்லனாக உருவெடுத்து ஜான் கொக்கன் லைக்ஸ் அள்ளினார்.


இவரது மனைவி பூஜா விஜய் தொலைக்காட்சியில் விஜேவாகத் தொடங்கி பின் நடிகையாக உருவெடுத்து கவனமீர்த்தார். சென்ற 2019ஆம் ஆண்டு ஜான் கொக்கனும் பூஜாவும் திருமணம் செய்துகொண்டனர். 
இருவருக்கும் இது இரண்டாம் திருமணம் எனும் நிலையில், இருவரும் தொடர்ந்து இணையத்தில் ஃபோட்டோக்கள் பதிவிட்டு பலரது விருப்பமான க்யூட் ஜோடியாக உருவெடுத்தனர்.


இந்நிலையில், முன்னதாக தாங்கள் பெற்றோராகவிருப்பதாக அறிவித்த ஜான் - பூஜா தம்பதி தொடர்ந்து வளைகாப்பு புகைப்படங்கள், கர்ப்ப கால புகைப்படங்களை இந்த ஜோடி பகிர்ந்து இணையத்தில் ட்ரெண்டாகினர். 


சென்ற ஏப்.29ஆம் தேதி இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தங்கள் குழந்தைக்கு கியான் கொக்கன் எனப் பெயரிட்டுள்ளதாக ஜான் அறிவித்தார். மேலும், “எங்கள் இதயங்களையும் வாழ்வையும் மகிழ்ச்சியால் நிரப்ப குட்டிப் பையன் வந்துவிட்டான்” என நெகிழ்ச்சியுடன் அவர் பதிவிட்டிருந்தார்.


இந்நிலையில், தற்போது முதன்முறையாக தங்கள் மகன் கியான் கொக்கனின் முகம் தெரியும்படியான புகைப்படத்தை ஜான் தன் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். 






“எங்கள் காதல் கதை ஒரு தொடக்கம் தான், எங்கள் காதலால் இவன் பிறந்துள்ளான்” எனும் அழகிய கேப்ஷன் உடன் ஜான் கொக்கன் மனைவி மற்றும் மகன் உடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் லைக்ஸ் அள்ளி வருகின்றன.