Black Trailer: ஜீவா - பிரியா பவானி சங்கர் நடித்துள்ள பிளாக் படத்தின் டிரைலர் வெளியானது

Black Trailer : ஜீவா , பிரியா பவானி சங்கர் நடிப்பில் ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் பிளாக் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

Continues below advertisement

பிளாக் டிரைலர்

நடிகர் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள புதிய படம் பிளாக் . கே.ஜி பாலசுப்ரமணி இப்படத்தை இயக்கியுள்ளார். விவேக் பிரசன்னா, யோக் ஜபீ, ஷா ரா, ஸ்வயம் சித்தர் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Continues below advertisement

 டிரைலர் எப்படி

காதலர்களான ஜீவாவும் பிரியா பவானி சங்கரும் புதிதாக ஒரு வில்லாவிற்கு குடி போகிறார்கள். பல்வேறு வீடுகள் இருந்தாலும் இந்த பகுதியில் குடியேறும் முதல் தம்பதிகள் இவர்கள். இந்த இடத்தில் நடக்கும் மர்மங்களே இப்படத்தின் கதை. நடிகை பிரியா பவானி சங்கர்  நடித்து சமீபத்தில் வெளியான டிமாண்டி காலணி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. தற்போது பிளாக் திரைப்படமும் ஹாரர் த்ரில்லர் கலந்த ஜானரில் உருவாகி இருப்பதால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

நடிகர் ஜீவாவைப் பொறுத்தவரை அவர் சமீபத்தில் தமிழில் நடித்த படங்கள் பெரியளவில் வெற்றிபெறவில்லை. தெலுங்கில் அவர் நடித்த யாத்ரா திரைப்படம் ஓரளவு வெற்றிபெற்றது என்றாலும் தமிழில் இப்படத்திற்கு பெரியளவில் வரவேற்பு இல்லை. தற்போது பிளாக் திரைப்படம் அவருக்கு ஒரு கம்பேக் படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். 

ALSO READ | Meiyazhagan Movie Review : கார்த்தி அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் பட திரை விமர்சனம்..

Continues below advertisement
Sponsored Links by Taboola