துபாய் நகரத்தில் தனது தங்கை குஷி கபூருடன் தனது விடுமுறையைக் கொண்டாடி வருகிறார் ஜான்வி கபூர். இருவரின் நண்பரான ஒர்ஹான் அவத்ரமணியும் அவர்களுடன் விடுமுறையைக் கழித்து வருகிறார். ஜான்வி கபூர் துபாய் சென்று இறங்கியதில் இருந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய படங்களை அப்லோட் செய்து வருகிறார். பாலைவனத்தில் சஃபாரி சென்றது முதல் கடற்கரையில் ஃபோட்டோஷூட் நடத்துவது எனத் தங்கள் விடுமுறையை மிகவும் மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றனர் இந்த மூவர் குழு. 


கடந்த நவம்பர் 11 அன்று, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி அணிந்த படங்களை ஜான்வி பதிவேற்றினார். அதில் அவர் குஷி கபூருடன் இருக்கும் படங்களையும், கடல்நீரில் விளையாடும் படங்களையும் பதிவு செய்து, அதில் `லுங்கி டேன்ஸ்!’ என்று குறிப்பிட்டிருந்தார். 


ஜான்வி கபூரின் படங்கள் பாலிவுட்டின் பிற நடிகர்களாலும், அவரது நண்பர்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டது. கியாரா அத்வானி, வடிவமைப்பாளர் மணிஷ் மல்ஹோத்ரா, பூமி பெட்நேகர் முதலான பாலிவுட் பிரபலங்கள் அவரது படத்தின் கீழ் கமெண்ட்களைக் கொடுத்திருந்தனர். 






தனது அக்காவைப் போல, குஷி கபூர் தன் படங்களை வெளியிட்டு, `99 பிரச்னைகள் இருக்கின்றன, அவற்றுள் கடற்கரை ஒரு பிரச்னை இல்லை’ எனக் கூறியிருந்தார். இருவரும் பாலைவனத்தில் சஃபாரி சென்ற போது பதிவேற்றிய படங்கள் கபூர் குடும்பத்தாரிடம் இருந்து வரவேற்பைப் பெற்றது. மஹீப் கபூர், சஞ்சய் கபூர், அன்ஷுலா கபூர், கரண் பூலானி ஆகிய பிரபலங்கள் கமெண்ட்களை வெளிப்படுத்தியிருந்தனர். 


இயக்குநர் சித்தார்த் சென்குப்தா இயக்கத்தில் `குட் லக் ஜெர்ரி’ படத்தில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர். அடுத்தடுத்து மலையாளத் திரைப்படமான `ஹெலன்’ ரீமேக்கிலும், `தோஸ்தானா 2’ படத்திலும் நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.