ஜெனிஃபர் கூலிட்ஜ் இருபது வருடங்களுக்கு மேலாக ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை ஆவார். பல பிரபலமான சீரிஸ்கள் மற்றும் படங்களில் பணியாற்றியவர் அவர். தற்போது 60 வயதாகும் அவர் பிரபலமாக இருப்பதற்கு காரணம், 1999 ஆம் ஆண்டு அமெரிக்கன் பை திரைப்படத்தில் நடித்ததுதான். அந்த படத்தில் நடித்த கதாபாத்திரம் மூலம் அவர் இன்னும் அடையாளம் காணப்படுகிறார்.


அமெரிக்கன் பை கதாபாத்திரம்


அமெரிக்கன் பை திரைப்படத்தில் அவர் ஜீனைன் ஸ்டிஃப்லர் என்ற நடுத்தர வயது பெண்ணாக நடித்திருந்தார். அவரது மகனின் பதின்வயது நண்பர்கள் அவரை பாலியல் ரீதியாக பார்ப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அடல்ட் திரைப்படமான அதில் போலடான சில காட்சிகளில் அவர் நடித்திருப்பார்.



ஜெனிபர் திரைப்படங்கள்


இந்த படத்திற்கு பிறகு, லீகலி ப்ளாண்ட் (2001), எபிக் மூவி (2007), எ சிண்ட்ரெல்லா ஸ்டோரி (2003) போன்ற பல வெற்றிப் படங்களில் ஜெனிஃபர் பேசக்கூடிய கதாப்பாத்திரங்களை நடித்தார். ஜோயி (2004-06) மற்றும் 2 ப்ரோக் கேர்ள்ஸ் (2012-17) ஆகிய காமெடி சீரிஸ்களில் துணை வேடங்களிலும் அவர் தோன்றினார். அவர் தற்போது HBO தொடரான ​​தி ஒயிட் லோட்டஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: அடுத்த 48 மணிநேரத்தில் அதிரடிகாட்ட இருக்கும் மழை.. 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!


200 பேருடன் உடலுறவு


அவர் ஒரு சமீபத்திய பேட்டியில், அந்த கதாபாத்திரத்தின் மிகைப்படுத்தலை பற்றி பேசி இருந்தார். மேலும் அது பல சினிமா வாய்ப்புகளை மட்டும் வாங்கி தரவில்லை, தனிப்பட்ட முறையிலும் தனக்கு வெவ்வேறு முறைகளில் பயனளித்தது என்று பேசியுள்ளார். அவர் பேசுகையில், "அமெரிக்கன் பை திரைப்படத்தில் நடித்ததன் மூலம், என்னோடு நிறைய பேர் பாலியல் ரீதியாக உறவு கொண்டனர். அந்த திரைப்படத்தின் மூலம் நிறைய நன்மைகள் கிடைத்தன, நான் 200 பேருடன் உடலுறவு கொண்டிருந்திருப்பேன்", என்று கூறினார்.



திரைப்படம் தந்த பிரபலம்


இந்த பாத்திரமும், அது அடைந்த பிரபலமும் தனக்கு தொழில் ரீதியாகவும் நிறைய வழிகளை ஏற்படுத்தியதாக ஜெனிஃபர் மேலும் கூறினார். அமெரிக்கன் பைக்கு முன், அவர் பல ஆண்டுகளாக ஆடிஷன் செல்வது, சிறிய வேடங்களில் நடிப்பது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார். ஆனால் அது திடீரென்று ஒரு படத்தால் மாறியது. அதுகுறித்து பேசுகையில், "என்னால் சிலர் வீட்டு வாசலில் கூட நுழைய முடியாது என்று நினைத்த நபர்கள், திடீரென்று அவர்களே என்னை அணுகுகிறார்கள். என் நண்பர்கள் அனைவரும் நடந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டார்கள். என் வாழ்க்கை நீண்ட காலமாக ஒரு குறிப்பிட்ட வழியில் சென்று கொண்டிருந்தது. நான் அதை அதிகமாக யோசித்து யோசித்து கெடுத்துக்கொண்டு இருந்தேன், ”என்று அவர் மேலும் கூறினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.