‛இவ்வளவு மதுபானமா...’ வாங்கிக் குவித்த TTF வாசன்... அந்தமானில் வெளியான அந்தரங்கம்!

TTF Vasan: பலர் இதுபோன்றவற்றை மறைத்து தான் வீடியோ வெளியிடுவார்கள் என்றும், தான் எதையும் மறைக்காமல் உண்மையாக வீடியோ வெளியிடுவதாகவும் தெரிவித்தார் TTF வாசன். 

Continues below advertisement

TTF வாசனை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. தனது பிறந்தநாளை திறந்தநாளாக கொண்டாடி, அனைவரிடத்திலும் அலாதிக்கு அதிகமாக அறிமுகமாகிக் கொண்டார். பைக் சாகசங்களை செய்து பலரையும் கவர்ந்த TTF வாசனை ஏராளமான இளைஞர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். 

Continues below advertisement

இணைய வழியாக தன் சாகசங்கள் மூலம் ஏராறமானவர்களை பெற்று, அதன் மூலம் நல்ல வருவாயும் பெற்று வருகிறார். உழைக்கிறார், சம்பதிக்கிறார். அதில் எந்த பிரச்னையும் இல்லை. தன் நண்பருடன் அடிக்கடி வெளியூர் பயணம் செல்லும் TTF வாசன், சமீபத்தில் பெங்களூரு சென்றுள்ளார்.


அங்கிருந்து திடீரென முடிவு செய்து, அந்தமான் புறப்பட்ட அவர், அங்கு இன்பச் சுற்றுலா நடத்திக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவரது நண்பருடன் புறப்பட்ட அவர், அந்தமானில் ஒரு ரவுண்ட் அடுத்ததோடு நிற்காமல் , ஒரு ‛ரவுண்டும்’ அடித்து, அதையும் வீடியோ போட்டுள்ளார். 

அந்தமானில் உள்ள ஒயின்ஷாப் ஒன்றுக்குச் சென்ற TTF வாசன், அங்கு பிரபல நிறுவன தயாரிப்பின் பல்வேறு வகையான மதுபானங்களை வாங்கியுள்ளார். அத்தோடு , அதே ப்ராண்டில் தனது ஊரில், லெமன் மட்டுமே கிடைக்கும் என்றும், இங்கு இவ்வளவு வகை கிடைப்பது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக கூறியுள்ளார் TTF வாசன், மதுபானங்கள் அங்கு குறைவாக கிடைப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தார். 

தான் இவற்றை வாங்குவதால் தனது TTF குரூப்புகள் தவறாக நினைக்க வேண்டாம் என்றும், பலர் இதுபோன்றவற்றை மறைத்து தான் வீடியோ வெளியிடுவார்கள் என்றும், தான் எதையும் மறைக்காமல் உண்மையாக வீடியோ வெளியிடுவதாகவும் தெரிவித்தார் TTF வாசன். 

டெபிட் கார்டு மூலம் ஃபர்செஸ் செய்த மதுபானங்களை காரில் ஏற்றிக் கொண்டு சென்று TTF வாசன், அதன் பின், தன் நண்பர்களுடன் இணைந்து அவற்றை பருகி மகிழ்ந்துள்ளார். ‛தமிழ்நாட்டு மது வயிறு எரியும்... அந்தமானில் கிடைப்பது கர்நாடக மேக்கிங் மது, அது சூப்பராக இருக்கும்’ என உடன் வருபவர் கூற, ‛ஓ... அப்படியா...’ என வியந்து போனார் TTF வாசன். 

கேரளாவில் குடிப்பதை போலீஸ் பார்த்தால், உடனே அபராதம் விதிப்பார்கள் என்றும், தனக்கு அதுமாதிரியான அனுபவம் உள்ளதாகவும் கூறிய TTF வாசன், தனக்கு ஆல்கஹால் குறைவாக உள்ள மதுவை வாங்கித்தந்ததால், நொந்து கொண்டார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement