பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் ஆகாஷ் அமையா ஜெயின் மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் " காதல் கதை சொல்லவா" இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் நகுல் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.ஆத்மிகா, ரித்திக்கா சென் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ரமேஷ் திலக் நடித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி தற்போது பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளதாக அண்மையில் அவர் தெரிவித்திருந்தார். இது தவிர்த்து வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படங்கள் தவிர்த்து வித்தியாசமான முயற்சியில் மெளனப் படமாக உருவாகியுள்ள காந்தி டாக்ஸ் படத்தில் நடித்துள்ளார். அரவிந்த் சாமி , அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் வரும் ஜனவரி 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தெலுங்கில் புரி ஜகன்நாத் இயக்கத்தில் ஸ்லம்டாக் , மிஸ்கின் இயக்கத்தில் ட்ரெயின் ஆகிய படங்களும் ரிலீஸூக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் விஜய் சேதுபதி . ஜெயராம் மற்றும் நகுல் இணைந்து நடித்துள்ள காதல் கதை சொல்லவா கவனிக்கதக்க படங்களில் ஒன்று.
படக்குழு
வசனம் - கண்மணி ராஜாஷாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.M. ஜெயச்சந்திரன் மற்றும் சரத் இருவரும் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். கண்மணி ராஜா, முத்தமிழ், கவிதாரவி, K. பார்த்திபன் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.C. பிரசன்னா, சுஜித், பிரவின்.G மூவரும் நடனம் அமைத்துள்ளனர்.எடிட்டிங் - ஜீவன்கலை இயக்கம் - சிவா யாதவ்ஸ்டண்ட் - T. ரமேஷ்தயாரிப்பு நிறுவனம்- பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட்தயாரிப்பாளர் - ஆகாஷ் அமையா ஜெயின்.
கதை எழுதி திரைக்கதையமைத்து இயக்கியுள்ளார் - சனில்
படம் பற்றி இயக்குனர் பகிர்கையில் மூன்று கோணங்களில் நடக்கும் வித்தியாசமான காதல் கதை இது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இதுவரை நடித்திராத புதிய பரிணாமத்தில் இந்த படத்தில் வருகிறார். “காதல் கதை சொல்ல வா” – மனித உணர்வுகள், நம்பிக்கை, காதல், தியாகம், மற்றும் மனிதநேயத்தின் வலிமையை சொல்கின்ற மனதை நெகிழ வைக்கும் படமாக இருக்கும். படம் பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாககிறது.
