மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோருடன் இணைந்து அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கிறார். அருள்மொழி வர்மன்தான் பொன்னியின் செல்வன் என்று அழைக்கப்படும் பின்னாட்களில் ராஜா ராஜா சோழன். இரு பாகங்களாக வெளியாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. படத்திலிருந்து ஒருவர் பின் ஒருவராக தங்களது பகுதிகள் நிறைவடைந்ததும் ஊருக்கு திரும்புகின்றனர். இரு நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் மும்பை திரும்பி இருந்தார்.
தற்போது திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்தில் நடிக்கும் ஜெயம் ரவி தனது காட்சிகள் முடிந்து மத்திய பிரதேசத்தில் இருந்து ஊருக்கு திர்பியிருக்கிறார். திரும்பியவர் தனது அம்மாவின் பிறந்த தினமான இன்று அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து சொல்லி சில பொன்னியின் செல்வன் குறித்த டீவீட்களை பெயர் குறிப்பிடாமல் எழுதியுள்ளார்.
அவரது டீவீட்டில், "இப்படி ஒரு மேக்னம் ஓபஸை தலைமைதாங்கியதை அருகிலிருந்து காணும் பாக்கியம் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி, அருகிலிருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம்" என ஒரு டீவீட்டிலும், "தங்களது ஆசிர்வாதத்திற்கும், நகைச்சுவைக்கும், அன்பான இயல்புக்கும் நன்றி" என்று ட்வீட் செய்துள்ளார். அதனை தொடர்ந்து, அந்த திரைப்படத்தின் தான் சம்மந்த பட்ட காட்சிகள் படமாக்க பட்டு முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மணிரத்னத்தின் செட்டில் இருந்ததை தற்போது மிகவும் மிஸ் செய்வதாகவும், மீண்டும் மணிரத்னத்துடன் வேலை செய்ய காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் இட்டுள்ள டீவீட்டில் எங்கும் மணிரத்னம் எனும் பெயரோ, பொன்னியின் செல்வன் என்னும் பெயரோ இடம்பெறவில்லை. "ஒரு திரைப்படம் அல்ல, இரு திரைப்படங்களின் படப்பிடிப்பு முடிந்துள்ளது" என்று சூசகமாக இரு பாகங்களாக வெளிவர இருக்கும் பொன்னியின் செல்வனை குறிப்பிட்டுள்ளார்.
இத்திரைப்படம் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் தழுவல் ஆகும். கல்கியின் நாவல், தென்னிந்தியாவின் ஆளுமைமிக்க மன்னர்களுள் ஒருவரான அருள்மொழி வர்மனின் ஆரம்ப கால கதைகளை பேசுகிறது. பிற்காலங்களில் ராஜராஜ சோழன் என்று அறியப்பட்டவர் தான் அருள்மொழி வர்மன். இதை திரைப்படமாக்க தமிழ் சினிமாவில் பல வருடங்களாக பலர் முயன்றிருந்தாலும், ஒருவழியாக மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தயாரித்து இயக்கிவருகிறார். லைக்கா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. மணிரத்னத்துடன் இணைந்து இளங்கோ குமரவேலும், எழுத்தாளர் ஜெயமோகனும் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இதற்கும் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ரவி வர்மன் பணிபுரிகிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.
கடைசியாக ஜெயம்ரவிக்கு பூமி திரைப்படம் ஹாட்ஸ்ட்டாரில் வெளியாகி இருந்தது. இயற்கை விவசாயத்தை பற்றி பேசும் அப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் கலமிறங்கியுக்கும் வித்தியாச கதைகளம் என்பதால், ஜெயம் ரவி ரசிகர்களும் எதிர்நோக்கி இருக்கின்றனர்.