Jayam Ravi as Gangster in 'Agilan' : கடத்தல்காரராக ஜெயம்ரவி நடிக்கும் 'அகிலன்' திரைப்படம் நவம்பரில் வெளியாகுமா? 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒரு திறமையான நடிகர் ஜெயம் ரவி. இயக்குனர் மணிரத்னத்தின் காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன் 1" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. அந்த படத்தின் ரிலீஸ்காக திரை ரசிகர்களை போல் அவரும் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். 


 



 


ஜெயம் ரவி நடிக்கும் 'அகிலன்' :
 
நடிகர் ஜெயம் ரவி தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் "பூலோகம்" படத்தை அடுத்து மீண்டும் ஒரு திரைப்படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த கூட்டணியில் உருவாகும் "அகிலன்" திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சில மாற்றங்களால் இப்படம் நவம்பர் மாதம் 11ம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது என கூறப்படுகிறது. படத்தின் பணிகள் முடியும் தருவாயில் இருப்பதால் விரைவில் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வமான தகவல் இதுவரையில் வெளியாகவில்லை. 


 






 


கேங்ஸ்டராக ஜெயம் ரவி :


ஜெயம் ரவி நடிக்கும் "அகிலன்" திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் பிரியா பவானி ஷங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன். ஜெயம் ரவி ஒரு கேங்ஸ்டராகவும், பிரியா பவானி ஷங்கர் ஒரு போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர். சென்னை துறைமுகத்தை சுற்றிலும் நடைபெறும் கடத்தலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் விவேக். இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம். இது தவிர மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.