தமிழ் திரையுலகின் பிரபல பாடகர் பம்பா பாக்யா. இவர் இன்று திடீரென உயிரிழந்தார். இவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பல திரைப்படங்களில் இவர் பாடியுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் வெளியான சிம்டாங்காரன், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் படத்தில் இடம்பெற்ற புல்லினங்கால் உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள பொன்னி நதி பாடலையும் இவர்தான் பாடியுள்ளார்.


உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பம்பா பாக்யா மேடை கச்சேரிகளில் பாடி வந்தவர். அவரது திறமையை கவனித்த ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய படங்களில் பாடும் வாய்ப்பை அவருக்கு வழங்கினார். ராவணன் படத்தில் இடம்பெற்ற கிடா கிடா கறி அடுப்புல இருக்குது பாடல் தமிழ் சினிமா இவரை திரும்பி பார்க்க வைத்தது.  


அவர் சர்கார், பிகில், இரவின் நிழல், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் மிகவும் பிரபலமான பாடகராக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், திடீரென உயிரிழந்த சம்பவம் ரசிகர்களுக்கும், தமிழ் சினிமாவிற்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது. அவரது மறைவிற்கு ரசிகர்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.