பூலோகம் படத்தை இயக்கிய என்.கல்யாண கிருஷ்ணனுடன் இரண்டாவது முறை இணைந்து அகிலன் படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். கைதி படம் புகழ் ஹரிஷ் உத்தமன், கருப்பன பட நாயகி தன்யா ரவிச்சந்திரன், மெர்சல் புகழ் ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


அகிலன்:


முன்னதாக, என்.கல்யாண கிருஷ்ணன் - ஜெயம் ரவி காம்போவில் வெளியான பூலோகம் படம், நல்ல கதை அமைப்பை கொண்டிருந்தாலும்  மக்களின் வரவேற்பை பெறவில்லை. இதற்கு காரணம் அப்படத்தின் மேல் இருந்த எதிர்ப்பார்புதான்.


எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக பாக்ஸர் ரோலில் மீண்டும் ஜெயம் ரவி களமிறங்கிய படம் பூலோகம். அப்படத்தின் இரண்டாம் பாகம் என்ற புரளியும் காற்றோடு காற்றாக பரவி வந்தது. இப்படத்திற்காக, பாக்சிங் பயிற்சியை ஜெயம் ரவி மேற்கொண்டார். அத்துடன், இப்படத்தின் லுக்கிற்காக ஜெயம் ரவி தாடி வளர்க்க வேண்டி இருந்தது. இதனால் பூலோகம் படத்தின்  ஷூட்டிங், பல நாட்களாக கிடப்பில் போடப்பட்டது. 


இன்று முதல் பாடல்:


ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க அமலா பாலிற்கும் நயன்தாராவிற்கும் அழைப்பு விடப்பட்டது. ஒரு சில காரணத்தால் இருவரும் இந்த வாய்ப்பை தவிர்த்தனர். அதனால், த்ரிஷா கதாநாயகியாக நடித்தார். திடீர் என்று எந்தவொரு ப்ரோமோஷனும் இல்லாமல் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் வெளியான இப்படம், வெளிவந்தும் மக்களின் கவனத்தை ஈர்க்க தவறியது.




தற்போது, அகிலன் படம் வரும் மார்ச் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அப்படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.


இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை ஜீ 5 நிறுவனம் வாங்கியுள்ளது.இதனையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.