உலகநாயகன் கமல்ஹாசன் ஜாஸ் சினிமாஸில் "பொன்னியின் செல்வன் " திரைப்படத்தை பார்த்து விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த நிகழ்வில் நடிகர் ஜெயம் ரவி கலந்து கொள்ள இயலாததற்கு ஒரு குறிப்பு பதிவிட்டுள்ளார். 


உலகமே கொண்டாடி வரும் ஒரு திரைப்படம் சமீபத்தில் வெளியான சரித்திர திரைப்படமான "பொன்னியின் செல்வன்". அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை மையமாக வைத்து அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பிரமாண்டமான திரைப்படம். இப்படம் வெளியான நாள் முதல் இன்று வரை அனைவரிடமும் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட 300 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலை ஈட்டியுள்ளது. 


 




ஜாஸ் சினிமாஸில் கமல்ஹாசன், விக்ரம் மற்றும் கார்த்தி:


இந்த சரித்திர படத்தை இரு தினங்களுக்கு முன்னர் நடிகர் விக்ரம் மற்றும் கார்த்தியோடு இணைந்து திரையரங்கில் பார்த்தார் உலக நாயகன் கமல்ஹாசன். படத்தை பார்த்த பிறகு அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆனது. அவரின் பேச்சு ரசிகர்களை வியக்க வைத்தது என்றே சொல்ல வேண்டும்.  அவர் பேசுகையில் " தமிழ் சினிமாவிற்கு இது ஒரு பொற்காலம். அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் மூலம் வசூல் வேட்டை அமோகமாக நடந்துள்ளது என்பது சந்தோஷம். இயக்குனர் மணிரத்னம், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மிகவும் சிறப்பாக இயக்கியுள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வந்தியத்தேவன் மற்றும் அருள்மொழி வர்மன் கதாபாத்திரம் இவை இரண்டுமே எனக்கு ஒரு காலத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது கார்த்திக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததை எண்ணி நான் பொறாமைப்பட்டேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்றார். அவரின் இந்த ஸ்டேட்மென்ட் சோசியல் மீடியாவில் மிகவும் ட்ரெண்டிங் ஆனது. இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட கார்த்தி மற்றும் விக்ரம் இருவரும் படத்திற்கு அளித்த ஆதரவுக்காக மக்களுக்கு தங்களின் நன்றிகளை தெரிவித்தனர். 


மேலும் கமல்ஹாசன் இயக்குனர் வெற்றிமாறன் கருத்து குறித்து பேசுகையில் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே கிடையாது, சைவம் மற்றும் வைணவ மதங்கள் மட்டுமே இருந்தன என அதிரடியாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.


 






 


ஜெயம் ரவி நடிகர் கமலுக்கு குறிப்பு :


இந்த நிகழ்வில் விக்ரம் மற்றும் கார்த்தி மட்டுமே கலந்து கொண்டனர். நடிகர் ஜெயம் ரவி கலந்து கொள்ள இயலவில்லை. வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதால் கலந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போனது என்பதை மிகவும் வருத்தத்துடன் தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துக் கொண்டார் ஜெயம் ரவி. மேலும் அவர் கூறுகையில் உங்களின் அன்பு எங்களுக்கு கொடுத்ததற்கு மிகவும் நன்றி என குறிப்பிட்டு இருந்தார் ஜெயம் ரவி.