Jayam Ravi: மவுசு குறையாத ஜெயம் ரவி... வில்லனாக நடிக்க மட்டும் இத்தனை கோடி சம்பளமா?

நடிகர் ரவி மோகன் கடைசியாக நடித்த 5 படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்தாலும் அவரிடம் கதை சொல்ல இயக்குநர்கள் போட்டா போட்டி போட்டுக் கொள்கிறார்களாம்.

Continues below advertisement

2025ம் ஆண்டு ஜெயம் ரவிக்கு சினிமா வாழ்க்கை அவ்வளவு ஓஹோவென அமையவில்லை என்றே சொல்ல வேண்டும். பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் ரவி மோகனின் நடிப்பு பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. பொன்னியின் செல்வனாக நேர்ந்த மற்றும் மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனையடுத்து அவருக்கு படங்கள் குவிய ஆரம்பித்தன. 

Continues below advertisement

கல்யாண் இயக்கத்தில் அகிலன், அகமத் இயக்கத்தில் இறைவன், ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன், எம்.ராஜேஷ் இயக்கத்தில் பிரதர், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை என அடுத்தடுத்து ரிலீஸ் ஆன அத்தனை படங்களுமே வசூல் மற்றும் விமர்சன ரீதியாக சொல்லிக்கொள்ளும் படியான வரவேற்பை பெறவில்லை. 


இடையில் மனைவியுடன் விவாகரத்து அறிவிப்பு, பெயர் மாற்றம் என்று அவரது பெயர் பரபரப்பாக பேசப்பட்டாலும், படம் ஓடாததால் இனி பெரிய அளவில் ஜொலிக்கமாட்டார் என விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக ஜெயம் ரவி என்ற பெயரை மாற்றியதால், இனி அவருக்கு ஜெயமே இருக்காது என்றெல்லாம் விமர்சித்தவர்களும் உண்டு. ஆனால் ரவி மோகன் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வந்தாலும், அவரிடம் கதை சொல்ல பெரிய இயக்குநர்கள் பட்டாளமே காத்திருக்கிறதாம். ஹீரோ, வில்லன் என எந்த கதையாக இருந்தாலும் பொறுமையாக கேட்டுவிட்டு ரவி மோகன் ஓ.கே சொல்லி வருகிறாராம். குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றால் 15 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்கிறாராம். சம்பளமும், கதாபாத்திரமும் ஒத்துப்போனால் வில்லனாக நடிக்கவும் ரவி மோகன் டபுள் ஓ.கே. சொல்லி வருவதாக கூறப்படுகிறது. 


சித்தார்த், ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பில் அவள் என்ற ஹரார் படத்தை இயக்கிய மிலிந்த் ராஜு, சமீபத்தில் ரவி மோகனைச் சந்தித்து கதை சொல்லியிருக்கிறாராம். முதல் சந்திப்பில் ஒன்லைனைக் கேட்டே கதை பிடித்து போனதால், இரண்டாவது முறை சந்தித்து முழு கதையையும் கேட்க திட்டமிட்டுள்ளாராம். ரவி மோகன் எப்பொழுதும் இரண்டாவது முறை ஒரு இயக்குநரைச் சந்திக்கிறார் என்றால், அந்த கதையை ஓ.கே சொல்லிவிடுவார் எனக்கூறப்படுகிறது. எனவே ரவி மோகன், மிலிந்த் ராஜு கூட்டணியில் அசத்தலான படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola