தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி அடுத்தடுத்து பிஸியாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மிகவும் சவாலான கதைகளாக தேர்வு செய்து நடித்து வரும் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் அவரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது. 


 



'சைரன்' பிரஸ் மீட் :


இருப்பினும் அதன் தொடர்ச்சியாக சைக்கோ திரில்லர் ஜானரில் ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்த இறைவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால் இந்த ஆண்டு ஆரம்பமே நடிகர் ஜெயம் ரவிக்கு அற்புதமான ஒரு ஆண்டாக அமைந்துள்ளது.


ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்டோரின் நடிப்பில் வரும் பிப்ரவரி 16ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'சைரன்'. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் மிகவும் மும்மரமாக படத்தின் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 


டபிள் ஆக்ஷன் :


சமீபத்தில் 'சைரன்' படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. இதில் கலந்து கோண ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருந்தனர்.  அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதைக்களத்தில் ஜெயம் ரவி இரட்டை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக ஆக்ஷன் மற்றும்  திரில்லர் படங்களில் கவனம் செலுத்தி வந்த ஜெயம் ரவி இப்படத்தில் ஒரு குடும்ப சென்டிமென்ட் கலந்த ஒரு கேரக்டரில் நடித்துள்ளார் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. 


 



அடுத்தடுத்த ஷெட்யூல் :


ஜெயம் ரவி 'சைரன்' படத்தை தொடர்ந்து கமல்ஹாசனுடன் 'தக் லைஃப்' படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் அவர் நடிக்கும் காட்சிகள் வரும் மார்ச் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கும் 'காதலிக்க நேரமில்லை' படத்தில் நடித்து வருகிறார். காதலை மையமாக வைத்து வெளியாக இருக்கும் இந்த ரொமான்டிக் படத்தில் அவரின் ஜோடியாக நித்யா மேனன் நடித்து வருகிறார். 


இரண்டு ஆண்டுகளுக்கு பிஸி :


மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 திரைப்படம் மட்டுமின்றி பிரதர், ஜீனி, ஜனகனமன என வரிசையாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி எனவே 2024 மற்றும் 2025ம் முழுவதும் அவரின் வெரைட்டியான ஜானர் படங்களால் ரசிகர்களை உற்சாகப்படுத்த வருகிறார் நடிகர் ஜெயம் ரவி.