ஜெயம் ரவி


பிரபல சினிமா எடிட்டர் மோகனின் மகன் ரவி. இவர் 2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஜெயம் ரவி என்று அறியப்பட்டார்.  மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ரசிகர்களிடையே இன்று கூட கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக அந்த படத்தில் சதாவின் 'போயா போ' என்ற வசனங்கள் மீம் கண்டட்டாக மாறி இணையத்தில் இன்று வரை கலக்கி வருகிறது.


இதனை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் சந்தோஷ் சுப்பிரமணியன், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் போன்ற படங்கள் பெரும் வெற்றியை கண்டது. குறுகிய காலத்திலேயே இவர் நடித்த படங்கள் ஹிட்டாகியதோடு, இவருக்குனு தனி ரசிகர் பட்டாளமே அமைந்தது. 


இதனை அடுத்து பேராண்மை, தீபாவளி, மழை, தாம்தூம், ரோமியோ ஜூலியட், பூலோகம், எங்கேயும் காதல், நிர்மிர்ந்து நில், என பல ஹிட் படங்களை நடித்து கலக்கினார்.  இதற்கிடையில் 2015ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் ஜெயம் ரவிக்கு கம்பெக் கொடுத்த படமாக இருந்தது.  இந்த படத்தில் போலீஸாக நடித்து மிரட்டி இருப்பார். இந்த படம் வெளியாகுவதற்கு முன் சகலகலா வல்லவன் படம் இவருக்கு அட்ட ஃபிளாப் ஆக அமைந்தது. அதற்கு பிறகு தனி ஒருவன் படம் இவரின் கெரியரிலேயே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 


இதனை தொடர்ந்து, ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து கடைசியாக  திரையரங்கில் வெளியான படம் கோமாளி. லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இப்படம் ஹிட் ஆனது. கடைசியாக ஜெயம் ரவிக்கு, பூமி திரைப்படம் ஓடிடி ஹாட்ஸ்ட்டாரில் வெளியானது. இயற்கை விவசாயத்தை பற்றி பேசும் அப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது. 


இந்த வருடம் 5 படம்


அதன் பிறகு அவர் கலமிறங்கியிருக்கும் வித்தியாச கதைகளம் கொண்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.  மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோருடன் இணைந்து அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளார். குறைந்த அளவிலான காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தார். 


இந்நிலையில் பொன்னியன் செல்வம் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனின்  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்துக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் அதிக காட்சிகள் இவருக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ரிலீஸ்க்கு காத்திருக்கும் ஜெயம் ரவி