ஜவான் படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷாருக்கான் - அட்லீ முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள பாலிவுட் படம் ஜவான். பாலிவுட்டில் கால் பதிக்கும்போதே பாலிவுட் பாட்ஷாவாகக் கொண்டாடப்படும் நடிகர் ஷாருக்கானுடன் அட்லி கூட்டணி வைத்துள்ள நிலையில், படம் குறித்து எதிர்பார்ப்புகள் ஏற்கெனவே எகிறியுள்ளன.
படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜூன் 2ஆம் தேதி இந்தப் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் மூலம் தென்னிந்திய சினிமாக்களில் லேடி சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா பாலிவுட் எண்ட்ரி கொடுக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியாமணி, யோகி பாபு எனப் பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
பதான் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து முழு உற்சாகத்துடன் ஷாருக்கான் ஜவான் படத்தில் நடித்து வரும் நிலையில், இந்தப் படத்தின் அப்டேட் குறித்து ஷாருக் ரசிகர்கள் பெரும் எதிர்பாப்புகளுடன் காத்திருந்தனர்.
படத்தின் டைட்டில் அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான நிலையில் விரைவில் டீசர் அறிவிப்பு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஜவான் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்த வந்த நிலையில், தற்போது இப்படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக்காகியுள்ளது.
சிகரெட் பிடித்தபடியும் பெல்ட்டை சுழற்றியபடியும் ஷாருக்கான் சண்டை போடும் இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கருப்பு சட்டை அணிந்தபடி, இந்த ஆக்ஷன் காட்டியில் மாஸாக ஷாருக்கான் சண்டை போடும் வகையில் இந்தக் காட்சி அமைந்துள்ள நிலையில் ஒரு பக்கம் ஷாருக்கான் ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து இந்தக் காட்சிகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
மற்றொரு புறம், படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியாகும் முன்னரே டெலிட்டட் காட்சி வெளியானது பாலிவுட் வட்டாரத்தில் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் ஜவான் படத்தைத் தயாரிக்கும் நிலையில், அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். முன்னதாக ஜூன் 2ஆம் தேதி ஜவான் வெளியாகும் என ஏற்கெனவே படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது பட ரிலீஸ் தள்ளிப்போகலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
பல ஆண்டுகள் தென்னிந்திய சினிமாக்களில் கோலோச்சிய பின் தற்போது ஷாருக்கான் உடன் அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அதிரடி எண்ட்ரி தர உள்ளார்.
இந்நிலையில், முன்னதாக படப்பிடிப்பில் கலந்த்கொள்ள நயன் தாரா மும்பை சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
மேலும் படிக்க: காட்டுப்பசிக்கு விருந்தாகுமா STR 48? சிம்புவின் இத்தனை ஆண்டு தேடல் இதுதானா? தொடங்குகிறது தேசிங்கு பெரியசாமியின் வேட்டை