ஜவான் திரைப்படத்தை தங்கள் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க இருப்பதாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் பதிவிற்கு ஷாருக்கான் அளித்துள்ள பதில் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


ஜவான்


பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடித்திருக்கும் திரைப்படம் ஜவான். தமிழில் விஜய் நடித்த  தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி இருந்த அட்லீ முதன்முதலாக இந்தி திரையுலகில் தடம் பதித்துள்ளார். தனது முதல் படமே ஷாருக்கானை வைத்து எடுத்திருப்பதால் இந்தியா முழுவதும் ஜவான் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அட்லீ போல் முதன்முதலாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அனிருத், ஜவான் படத்துக்கு இசை அமைத்துள்ளார்.


ஜவானில் ஷாருக்கானிற்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதிபதியும் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜவான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை பலமடங்கு  அதிகரித்திருக்கும் நிலையில் நாளை உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகும் இதன் முன்பதிவு செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இந்தியா முழுக்க 10 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளதாக கூறப்படுகிறது . மேலும்  முன்பதிவில் மட்டும் சுமார் 125 கோடி ரூபாயை, ஜவான் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.


 மகேஷ் பாபு ட்வீட்






ரசிகர்கள் மட்டுமில்லாமல் தென் இந்திய திரையுலக பிரபலங்களில் பெரும்பாலானவர்கள் நடிகர் ஷாருக்கானின் தீவிர ரசிகர்கள். அதில் நடிகர் மகேஷ் பாபுவும் ஒருவர். ஜவான் படத்தைத்தான் தனது குடும்பத்துடன் சேர்ந்து திரையரங்குகளில் பார்க்க இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் மகேஷ் பாபு.


நன்றி தெரிவித்த ஷாருக்கான்






இந்த ட்விட்டிற்கு பதில் அளித்த நடிகர் ஷாருக்கான். மகேஷ் பாபுவிற்கு தனது நன்றியை தெரிவித்ததோடு  ஜவான் படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என்றும் தான் எப்போது படம் பார்க்கிறார் என்று சொன்னால் அன்றைய தினம் தானும் மகேஷ் பாபுவின் குடும்பத்தாருடன் சேர்ந்து ஜவான் படத்தை பார்ப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இந்த பதிவு இரு நடிகர்களின் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மகேஷ் பாபு


சர்கார்வாரி திரைப்படத்தைத் தொடர்ந்து  குண்டூர் காரம் என்கிற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் மகேஷ் பாபு. த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இந்தப் படத்தை இயக்குகிறார்.