பள்ளிக் காலத்தில் தன்னுடைய காதலிக்கு ரொம்ப பிடித்த ஷாருக்கானை, இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு வில்லனாக நடித்து அவரை பழிவாங்கி விட்டதாக நடிகர் விஜய்சேதுபதி கலகலப்பாக பேசியுள்ளார்.


அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதிபதி, யோகிபாபு என பலர் நடித்திருக்கும் ஜவான் திரைப்படம் வரும் 7ம் தேதி மூன்று மொழிகளில் திரைக்கு வருகிறது. படத்திற்கு அனிருத் இசை அமைத்து அதிரடி காட்டியுள்ளார். கடந்த சில நாட்களாக ஜவான் படத்தில் இருந்து வெளிவந்த ஒவ்வொரு அப்டேட்களும், வந்த எடம், ஹய்யோடா உள்ளிட்ட பாடல்களும் டிரெண்டாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. 


இந்நிலையில் படம் ரிலீஸுக்கு ஒரு வாரமே உள்ளதால் சென்னையில் பிரமாண்டமாக படத்தின் பிரீ ரிலீஸ் விழா நடைபெற்று வருகிறது. இதில் பாலிவுட் ஸ்டார் ஷாருக் கான், விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் அனிருத், அட்லீ உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். விழாவில் இசையமைப்பாளர் அனிருத், பாடலாசிரியர் விவேக் என ஒவ்வொருவராக பேசி வருகின்றனர். அந்த வரிசையில் பேசிய விஜய் சேதுபதி, நீண்ட நாட்களுக்குப் பிறகு ஷாருக்கானை பழிவாங்கி விட்டதாக கலகலப்பாகப் பேசினார்.


விஜய் சேதுபதி பேசுகையில், “இயக்குநர் அட்லீயின் கருப்பு நிறம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது லுக் அழகாக இருக்கும். ஐ லவ் தளபதி விஜய். அதற்காகவே தெறி படத்தை பலமுறை பார்த்துள்ளேன். இதை அட்லீயிடம் பலமுறை தெரிவித்துள்ளேன். குறைந்த நேரத்தில் கடினமாக உழைத்து இந்த வெற்றியை அட்லீயால் தரமுடிகிறது. திரையில் அவரது கடின உழைப்பை பார்க்கும்போது அழகாக உள்ளது. 






என்னுடைய ஸ்கூல் நாட்களில் நான் ஒரு பெண்ணை காதலித்தேன். அந்த பெண் சவுக்கார்ப்பேட்டை. ஆனால் அந்த பெண்ணிற்கு ஷாருக்கானை தான் ரொம்ப பிடித்து இருந்ததது. அப்போது தெரியவில்லை. இத்தனை நாட்களுக்கு பிறகு அவரை நான் பழிவாங்குவேன் என்று.


ஷாருக்கானின் அந்த மனிதநேயம் தான் எல்லாருக்கும் அவரை பிடிக்கிறது. நல்ல நடிகராக மட்டும் இல்லாமல் மனிதராகவும் வாழ்ந்து வருகிறார். அனைவரையும் சரிசமமாக பார்க்கும் அவரை எல்லாரையும் ஒரேபோல் தான் பார்க்கிறார். அவரது தன்னிச்சையான அந்த குணத்தையும் நான் பெரிதும் விரும்புகிறேன்” என விஜய் சேதுபதி கலகலப்பாகப் பேசினார்.