பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் இன்று அதாவது செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம் ஜவான். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஒட்டுமொத்த திரையுலகுமே ஆவலுடன் காத்திருந்தது. 


குறிப்பாக ஷாரூக்கானின் பதான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் ஜவான் படம் வெளியாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் ஆவல் அதிகமாகவே இருந்தது. படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் படத்தை தயாரிக்கவும் செய்தார் ஷாரூக். படம் வெளியாவதற்கு முன்னரே சுமார் 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 




அதேபோல், உலகம் முழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் முதல் காட்சி ஒளிபரப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை படக்குழு மிகவும் தீவிரமாக ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தவண்ணம் இருப்பதால், படத்தின் வசூல் என்ன என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில் இன்று மட்டும் அதாவது முதல் நாள் கலெக்‌ஷன் என்பது பாக்ஸ் ஆஃபீஸில் ரூபாய் 80 கோடி ரூபாய் வசூல் ஆகும் என கூறப்படுகிறது. அதேபோல் இன்று மற்றும் நாளை என முதல் இரண்டு நாட்களில் ரூபாய் 152 கோடி வசூல் செய்யும் என கூறப்படுகிறது. 




பாலிவுட்டில் நேரடியாக அட்லி இயக்கும் படம் வெளியாகியுள்ளதால், இந்த படத்தினை இயக்க அட்லி வாங்கிய சம்பளம் எவ்வளவு என்ற கேள்வியும் இருந்துவந்தது, அட்லி இந்த படத்தினை இயக்க ரூபாய் 52 கோடி ரூபாய் வாங்கியுள்ளதாகவும், இந்த படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் ரூபாய் 300 கோடி எனவும் கூறப்படுகிறது.