இன்று ஜவான் படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம்  இந்தி சினிமாவிற்குள் அடி எடுத்து வைத்திருக்கிறார் நடிகை நயன்தாரா. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன் ஷாருக் கான் படத்தில் நடிக்க தனக்கு வந்த வாய்ப்பு ஒன்றை நயன்தாரா மறுத்துத்தது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.


லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா


கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்தை சூடிக்கொண்டவர் நடிகை நயன்தாரா. கடந்த 2005 ஆம் வருடம் வெளியான ஐய்யா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நயன்தாரா. ரஜினி, அஜித், விஜய், என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகளுடன் இணைந்து மிகப்பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்.  அவரது 18 ஆண்டு திரைப்பயணங்களில்  பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கிறார். அவற்றை எல்லாம் கடந்து இன்று தமிழ் சினிமாவின் அதிகம் மதிக்கப்படும் மற்றும் அதிக வசூல் ஈட்டும்  நடிகைகளில் ஒருவராக தன்னை நிலை நிறுத்தி இருக்கிறார். கோலிவுட் மட்டுமில்லாமல் தற்போது ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார் நயன்தாரா.


ஜவான்


தமிழில் அடுத்தடுத்த ப்ளாக் பஸ்டர்களை விஜயுடன் கொடுத்து தற்போது அட்லீ பாலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கும் படம் ஜவான். ஷாருக் கான் , நயந்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன். யோகி பாபு நடித்து அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ரெட் சில்லீஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இன்று செப்டம்பர் 7 திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் ஜவான் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள  நயன்தாராவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்படுகிறது. பாலிவுட்டில் தனது முதல் படத்திலேயே இவ்வளவுப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளார் நயன். இந்த சமயத்தில் பல வருடங்களுக்கு முன்பாக நடந்து ஒரு  நிகழ்வும் ரசிகர்களால் நினைவு கூறப்படுகிறது.


சென்னை எக்ஸ்பிரஸ்


ஷாருக் கான் தீபிகா படூகோன் நடித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சென்னை எக்ஸ்பிரஸ். இந்தப் படத்தில் 1234 என்கிற ஒரு பாடலில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதற்காக படத்தின் இயக்குநர் நயன்தாராவை  அனுகியிருந்தார். ஆனால் தனது கதாபாத்திரங்களை அதிக கவணத்துடன் தேர்வு செய்து நடித்து வந்த நயன்தாரா இந்த வாய்ப்பை மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த கதாபாத்திரத்தின் பிரியாமனி நடித்தார். தற்போது சரியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஷாருக்கான்  படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளது நயன்தாரா எவ்வளவு உயரத்திற்கு வந்திருக்கிறார் என்பதை காட்டுவதாக அமைந்துள்ளது.




மேலும் படிக்க : TN CM MK Stalin to Visit Delhi : ‘சனாதன சர்ச்சை – திடீரென டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்’ காரணம் என்ன? Exclusive தகவல்கள்..!


Jawan Twitter Review: பாலிவுட்டை பதம் பார்ப்பார்களா தமிழ் படைப்பாளர்கள்! வெளியானது அட்லீயின் 'ஜவான்’ - ட்விட்டர் விமர்சனம் இதோ!