ஜவான் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வரும் நிலையில், படத்தின் பிரம்மாண்ட சண்டைக் காட்சி குறித்து சுவாரஸ்யத் தகவல் வெளியாகியுள்ளது.


ஷாருக்கான் - அட்லியின் ஃப்ரெஷ்ஷான கூட்டணியில் உருவாகி வரும் ஜவான் படத்தின் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் நயன்தாரா பாலிவுட் எண்ட்ரி கொடுக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியாமணி, யோகி பாபு எனப் பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.


இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முன்னதாக மும்பையில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதற்காக ஷாருக், தீபிகா படுகோன் இருவரும் முன்னதாக சென்னை வந்திறங்கிய காட்சி வைரலானது.


 






சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து இப்படத்தின் சண்டைக்காட்சி படமாக்கப்படுவதாகத் தகவல்கள் வந்த நிலையில், இந்த சண்டைக் காட்சிகள் குறித்து முன்னதாக சுவாரஸ்யமானத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 


அதன்படி, இந்த சண்டைக் காட்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் நடிக்கவுள்ளதாகவும், இதற்காக பிரத்யேகமாக பயிற்சி பெற்ற பெண்கள் மும்பையிலிருந்து சென்னை வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 






இந்த சண்டைக் காட்சியை ஏழு நாள்களில் படமாக்க அட்லி முடிவெடுத்துள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.