’திருச்சிற்றம்பலம்’ படத்தில் இடம்பெற்றுள்ள பிரபல பாடலான ‘மேகம் கருக்காதா’ பாடலுக்கு ஜப்பானிய ஜோடி நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நித்யாமேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.


நல்ல ஃபீல் குட் படமாக இப்படம் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து திரையரங்குகளில் ஓடிவருகிறது.  குறிப்பாக அனிருத் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன.


 






குறிப்பாக தனுஷ் எழுதி பாடிய ’மேகம் கருக்காதா’ பாடலும் அதன் மேக்கிங் வீடியோவும் பலரது பேவரைட் ஆக மாறியுள்ளது. மேலும் பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கொரியோ செய்துள்ள இந்தப் பாடல் தியேட்டர்களில் அனைவரையும் கவர்ந்தது.


உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை அனைவரும் இந்தப் பாடலுக்கு நடனமாடி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


அந்த வகையில் இந்தப் பாடலின் ஸ்டெப்களை ஜப்பானிய ஜோடி ஒன்று அச்சுப்பிசகாமல் க்யூட்டாக நடனமாடும் வீடியோ இன்ஸ்டாவாசிகளைக் கவர்ந்து ட்ரெண்ட் ஆகி வருகிறது.


 






கக்கேடாகு, பிரோ சான் எனும் ஐடியில் செயல்பட்டு வரும் இந்த ஜப்பானிய ஜோடி பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை அனைத்துப் பாடல்களுக்கு ஆடி இணையத்தைக் கலக்கி வருகின்றனர்.


அந்த வகையில் மேகம் கருக்காதா பாடலுக்கு ஆடியுள்ள இவர்களது வீடியோ 5 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்று இணையத்தில் வைரலாகியுள்ளது.