நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார், அமேசான் ப்ரைம்,வூட் போன்ற ஓடிடி தளங்களும் அவற்றில் வெளியாகும் தொடர்கள் மற்றும் படங்களின் எண்ணிக்கையும் சமீப காலங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், இம்மாதம் 6ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ள படங்களின் பட்டியலை பார்க்கலாம் வாங்க...


நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்-நெட்ஃப்ளிக்ஸ்


பிரபல இயக்குனர் சூரஜ்ஜின் இயக்கத்தில், வைகைப்புயல் வடிவேலு ஹீரோவாக நடித்து கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு நடித்த படம்தான் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ். இப்படத்தில் பின்னணி பாடகி சிவாங்கி, வில்லன் நடிகர் ஆனந்தராஜ், முனிஷ்காந்த், லொல்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை மறுநாள் வெளியாகிறது. 




விக்ரம் வேதா-வூட்


தமிழில் வெளியான விக்ரம் வேதா படத்தில், இந்தியில் அதே பெயரில் ரீ-மேக் செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டனர். இப்படம், ரசிகர்களின் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. இதில், ரித்திக் ரோஷன் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம், வூட் தளத்தில் வரும் 6-ஆம் தேதி வெளியாகிறது. 


Uunchai-ஜீ 5


சூரஜ் பர்ஜாத்யாவின் இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்திருந்த படம் Uunchai. ஃபீல் குட் படமாகவும், அட்வென்சரஸ் படமாகவும் உருவாகியிருந்த Uunchai திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பு கிடைத்தது. இப்படம், கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த 6ஆம் தேதி ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 




ஸ்டோரி ஆஃப் திங்க்ஸ்-சோனி லைவ் சீரிஸ்


அதிதி பாலன், சாந்தனு, ரித்திகா சிங்,கெளதமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் தொடர்தான் ஸ்டோரி ஆஃப் திங்க்ஸ். இத்தொடரில் மனிதர்களின் உணர்ச்சிகள் குறித்து நுட்பமாக அலசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களுக்குப்பிடித்த பல நடிகர்கள் இத்தொடரில் பெற்றுள்ளதால், ரசிகர்களுக்கு இதன் மீதுள்ள எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. ஸ்டோரி ஆஃப் திங்க்ஸ் தொடர், சோனி லைவ் தளத்தில் வரும் வெள்ளியன்று வெளியாகிறது. 


3C’s-சோனி லைவ் சீரிஸ்


Choices, Chances and Changes (தேர்வுகள், வாய்ப்புகள் மற்றும் மாற்றங்கள்) என்ற பெயரில் 3C’s என்ற தொடர் உறுவாகியுள்ளது. சித்ரா, சந்த்ரு மற்றும் கேட் என்ற மூவரைச் சுற்று சுழலும் கதைதான் இந்த 3சி.தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள இத்தொடர், சோனி லைவ் தளத்தில் இம்மாதம் 6ஆம் தேதி வெளியாகிறது.


சவுதி வெல்லாக்கா-சோனி லைவ் 


கடந்த ஆண்டு டிசம்பரில் திரையிடப்பட்ட மலையாளப்படம் சவுதி வெல்லாக்கா. இப்படம், கோவாவில் நடைப்பெற்ற திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படமும், சோனி லைவ் தளத்தில் வரும் 6ஆம் தேதி வெளியாகிறது. 


ஷஃப்பீகன்டே சந்தோஷம்-சிம்ப்ளி செளத்


மலையாளத்தில் வெளியாகியுள்ள நல்ல காதல் மற்றும் ஃபீல் குட் படங்களில் ஒரு படம்தான் ஷஃப்பீகன்டே சந்தோஷம். இதில், பிரபல மலையாள நடிகர்களான உன்னி முகுந்தன், பாலா மற்றும் திவ்யா பிள்ளை ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம், சிம்ப்ளி செளத் தளத்தில் நாளை மறுநாள் வெளியாகிளது.


தி மெனு-ஹாட்ஸ்டார்


அமெரிக்கன் டார்க் காமெடி ஹாரர் படங்களில் ஒன்றாக உருவாகியுள்ள படம், தி மெனு. குயின்ஸ் கேம்பிட் தொடரில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அன்யா டெய்லர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் மட்டுமன்றி, நிக்கோலஸ் ஹூட், ரால்ஃப் ஃபீனஸ் உள்ளிட்ட நடிகர்களும் இதில் நடித்துள்ளனர். இப்படம், டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வரும் 6ஆம் தேதி வெளியாகிறது.