நடிகை ஜான்வி கபூர் "மிலி" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தான் உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
இதுவரையில் ஜான்வி கபூர் எடுத்து நடிக்காத ஒரு சவாலான வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் "மிலி". மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் "ஹெலன்". மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமாக வெற்றிபெற்ற இப்படத்தின் ஹிந்தி ரீமேக் திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார் ஜான்வி கபூர். இப்படத்திற்காக மைனஸ் 15 டிகிரி வெப்பநிலையில் 20 நாட்களுக்கு படக்குழுவினரால் உருவாக்கப்பட்ட ஃப்ரீசருக்குள் படமாக்கப்பட்டது.
உடல் நலம் பாதிப்பு:
படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய பின்னரும் இன்னும் ஃப்ரீசரில் இருப்பது போலவே கனவு கண்டேன். அப்படம் எனது மன ஆரோக்கியத்தை மிக மோசமாக பாதித்தது. இரண்டு மூன்று நாட்களுக்கு கடுமையான உடல் வலி இருந்ததால் பெயின் கில்லர் மாத்திரைகளை எல்லாம் உட்கொண்டேன். படத்தின் இயக்குநரும் உடல்நலம் பாதிக்கப்பட்டார்.
கவர்ச்சிக்கு இடமில்லை :
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 15 மணி நேரம் ஒரு ஃப்ரீசரில் அழுதுகொண்டே இருந்தால் அது நிச்சயமாக கவர்ச்சியாக இருக்காது. மிலி திரைப்படம் படத்திற்காக அனைவரும் கஷ்டப்பட்டு எங்களது முழு ஒத்துழைப்பையும் கொடுத்துள்ளோம். குட் லக் ஜெர்ரி நடிகர் தனது கதாபாத்திரத்திற்காக 7.5 கிலோ எடையை அதிகரித்துள்ளார். இப்படம் நிச்சயம் ஹிந்தியிலும் ஒரு வெற்றிப்படமாக அமையும். மிலி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. இப்படம் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக தயாராகவுள்ளது. இப்படம் தமிழிலும் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.