ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் டோலிவுட்டில் அறிமுகமாகும் நிலையில், அவரது பிறந்த நாளான இன்று படக்குழுவினர் போஸ்டர் அப்டேட்டை பகிர்ந்துள்ளனர்.


நடிகை ஜான்வி கபூர் இன்று தன் 26ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு ஸ்ரீதேவி உயிரிந்த நிலையில், அவரது மகளான ஜான்வி கபூர் அதே ஆண்டே தடக் படம் மூலம்  பாலிவுட்டில் அறிமுகமானார்.


தன் தாய் ஸ்ரீதேவியின் வழிகாட்டுதலின்றி பாலிவுட்டில் அறிமுகமான ஜான்வி கபூர், தன் தாயின் தோற்றத்துடனான ஒப்பீடுகளால் தொடக்கத்தில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்.


ஆனால் தன் தனித்துவமான  தோற்றம், உடல்வாகை சிறப்பாகக் கையாண்டு எதிர்மறை விமர்சனங்களை பாசிட்டிவ் விமர்சனங்களாக மாற்றி பாலிவுட்டின்  பிரபல செலிப்ரேட்டிகளில் ஒருவராக ஜான்வி உருவெடுத்துள்ளார்.


மற்றொருபுறம் குறுகிய காலத்திலேயே நாயகிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்ததுடன் தேர்ந்தெடுத்த படங்களிலேயே ஒப்பந்தமாகி வருகிறார். இதுவரை வெறும் ஆறே படங்களில் ஜான்வி நடுத்துள்ள நிலையில், அவரது பவால், மிஸ்டர் அண்ட் மிசஸ் மஹி ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன.


இந்நிலையில், ஜூனியர் என்.டி.ஆரின் 30ஆவது படத்தில் ஜான்வி கபூர் இணைந்துள்ளது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஜான்வி தாவணி அணிந்து ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் போஸ்டரும் இந்த அறிவிப்புடன் வெளியாகியுள்ளது. இதனை முன்னதாக ஜான்வி தன் இன்ஸ்டா பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


 






கோலிவுட் தொடங்கி மலையாளம், தெலுங்கு இந்தி என ஸ்ரீதேவி பான் இந்தியா ஸ்டாராக வலம் வந்த நிலையில், தென்னிந்திய சினிமாவில் ஜான்வி கபூர் முதலில் ஸ்ரீதேவி தன் பயணத்தைத் தொடங்கிய கோலிவுட்டில் தான் அறிமுகமாவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கோலிவுட்டை முந்திக் கொண்டு தற்போது டோலிவுட் சினிமா ஜான்வியை அறிமுகம் செய்கிறது.


பாதி நாள் மும்பை வீடு, பாதி நாள் சென்னை வீடு என ஜான்வி கபூர் ஏற்கெனவே பறந்து வரும் நிலையில், தெலுங்கு தேசத்துக்கு திருப்பதி வெங்கடாச்சலபதியை வழிபடுவதற்காக அவ்வப்போது ஜான்வி விசிட் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஜூனியர் என் டிஆரின் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ள நிலையில் இனி ஜான்வியை தெலுங்கு தேசத்திலும் அடிக்கடி காணலாம் என மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் டோலிவுட் வட்டாரங்கள்.


மேலும் டோலிவுட்டில் 80களின் பிரபல நடிகைகளில் ஒருவராக ஸ்ரீதேவி கோலோச்சிய நிலையில் தன் தாயை மிஞ்சும் பிரபலமாக ஸ்ரீதேவி உருவெடுப்பாரா என்றும் எதிர்பார்ப்புகளுடன் டோலிவுட் ரசிகர்கள் காத்துள்ளனர்.