நடிகர் விஜயின் இறுதிப்படமான ஜனநாயகன் படத்தின் முதல் பாடலான தளபதி கச்சேரி வெளியாகியுள்ளது.

Continues below advertisement

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

முதல் சிங்கிள்:

விஜய்-யின் கடைசி படமாக ஜனநாயகன் என்பதால் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது.இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடலான தளபதி கச்சேரி வெளியாகியுள்ளது.  தளபதி கச்சேரி பாடலை அனிரூத், தெருக்குறல் அறிவு மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் சேர்ந்து பாடியுள்ளனர்.

Continues below advertisement

விஜயின் கடைசிப்படம்: 

நடிகர் விஜயின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் இயக்குனர் யார் என்று ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் எழுந்தது. இறுதியில் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று  படங்களை இயக்கிய எச் வினோத் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

பகவந்த் கேசரி ரீமேக்:

படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்தின் கதை குறித்த வியூகங்கள் எழத்தொடங்கின. இந்த படம் தெலுங்கில் பாலைய்யா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று செய்திகள் கசிந்தன. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து அதிகாரவப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. 

படத்தின் பிசினஸ்:

ஜனநாயகன் வெளியாக இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் படத்திற்கான ப்ரீ பிசினஸ் சூடுப்பிடித்துள்ளது. படத்தின் ஒடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 110 கோடிக்கு கைப்பற்றி உள்ளது. மேலும் இப்படத்தின் தமிழ்நாடு மற்றும் கேரள உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் வாங்கி உள்ளது. மேலும் ஆடியோ உரிமையை டி-சீரிஸ் நிறுவனம் 5 கோடிக்கு வாங்கி உள்ளது. இதன்மூலம் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் மட்டும் ரூ.260 கோடிக்கு மேல் நடந்து உள்ளது.