விஜயின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. தமிழ் நாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை காண முடியாத அதிருப்தியில் உள்ளார்கள்.  ஜனநாயகன் இசை வெளியீடு நிகழ்ச்சி Zee தமிழ்  தொலைக்காட்சியில் ஜனவரி மாதம் ஒளிபரப்பாக இருக்கிறது .

Continues below advertisement

விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் இசை வெளியீடு மலேசியா குவாலா லம்பூரில் புகிட் ஜலில் தேசிய மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் விஜயின் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டுள்ளார்கள். விஜயின் பெற்றோர்கள் , இயக்குநர் அட்லீ , லோகேஷ் கனகராஜ், நெல்சன் , தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் , விஜயின் நெருங்கிய நண்பர்களான சஞ்சீவ் ஆகியோ இந்த  நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்கள். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் படி விஜயின் பட பாடல்களை மேடையில் லைவாக பாடகர்கள் பாடி வருகிறார்கள். ஆட்டம் பாட்டம் என ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியைப் போல் இந்த நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகிறது

ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச் பார்ப்பது எப்படி 

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீடு மலேசியாவில் நடைபெறுவதால் தமிழ்நாட்டில் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். மேலும் இந்த நிகழ்ச்சி யூடியூப் சேனலிலோ அல்லது தொலைக்காட்சியிலோ லைவாக ஒளிபரப்பு செய்யப்படாதது மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோக்களை பகிர்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது 

Continues below advertisement

எங்கு பார்க்கலாம் 

ஜனநாயகன் படத்தின் சேட்டலைட் ரிலீஸ் உரிமத்தை  Zee நெட்வர்க் வாங்கியுள்ளது. படத்தின் இசை வெளியீடும் வரும் ஜனவரி மாதம் 4 ஆம் தேதி  Zee தமிழ் தொலைக்காட்சியிலும்  Zee5 தளத்திலும் ரசிகர்கள் பார்க்கலாம். ஜனநாயகன் ஆடியோ லாஞ்சின்  மொத்தம் 6 மணி நேர காணொளி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.