விஜயின் ஜனநாயகன் திரைப்படம்  நாளை ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட்ட இருப்பதால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்தது குறித்து பல்வேறு நடிகர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தும் வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சிம்பு விஜய்க்கு ஆதரவாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

Continues below advertisement

ஜனநாயகன் பற்றி சிம்பு

தனது எக்ஸ் பக்கத்தில் சிம்பு . " அன்புள்ள விஜய் தடைகள் உங்களை எப்போதும் தடுத்தது இல்லை. இதைவிட பெரிய புயலை எல்லாம் நீங்கள் கடந்து வந்துள்ளீர்கள். இதுவும் கடந்து போகும். ஜனநாயகன் படம் திரையரங்குகளில் வெளியாகும் போதுதான் எங்களுக்கு உண்மையான திருவிழா' என்று சிம்பு கூறியுள்ளார்