நடிகர் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள டாக்சிக் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. விஜயின் ஜனநாயகன் படத்தை தயாரித்த கேவிஎன் ப்ரோடக்‌ஷன்ஸ் இந்த படத்தை யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளது. 

Continues below advertisement

டாக்சிக் டீசர் 

கே.ஜி.எஃப் படத்தின் மூலம் பான் இந்திய அளவில் பெரும் ரசிகர்களை சம்பாதித்தவர் நடிகர் யாஷ். இவர் தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்சிக் என்கிற படத்தில் நடித்துள்ளார். தாரா சுதாரியா , ருக்மினி வசந்த் , நயன்தாரா , கியாரா அத்வானி ஆகிய நான்கு நடிகைகள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். நடிகர் யாஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மாஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் கேவிஎன் ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்கள். வரும் மார்ச் 19 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக படத்தில் நடிகைகளின் கதாபாத்திரங்களை ஒவ்வொருத்தராக அறிமுகப்படுத்தி வந்தது படக்குழு.  இப்படியான நிலையில் இன்று நடிகர் யாஷின் 40 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது

ஆபாச காட்சிகள் 

முன்னதாக படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியானபோதும் சரி தற்போது டீசரிலும் சரி இப்படத்தின் அதீதமான கிளாமர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. லையர்ஸ் டைஸ் , மூதோன் போன்ற பல விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்ற படங்களை இயக்கியவர் கீது மோகன்தாஸ். டிசரில் கிளாமர் காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும் இப்படத்தில் மிக அழுத்தமான ஒரு மெசேஜ் இருக்கும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் யாஷ் வெகுஜன திரைப்பட ரசிகர்களை திருபதிபடுத்தும் விதமாக மாஸ் காட்சிகளும் படத்தில் இருக்கும். 

Continues below advertisement

சென்சார் போர்டை பழிவாங்கிய கேவிஎன்

கேவிஎன் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் அலட்சியம் காட்டியதால் ரிலீஸ் குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது. இதனால் சென்சார் போர்டின் மீதான தங்களது கோபத்தை வெளிப்படுத்தவே இந்த மாதிரியான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.